தெய்வமே.. அந்த மனசு இருக்கே.. கலகத் தலைவன் படத்தை வாழ்த்திய ஆர்யா.. கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

சென்னை: சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஆர்யா நடித்த கேப்டன் படத்தை செம ஓப்பனாக கலாய்த்து இருந்தார் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள கலகத் தலைவன் படத்திற்கு ஆர்யா வாழ்த்தி உள்ள நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் ஆர்யாவின் ட்வீட்டுக்கு கீழ் கலகலப்பான கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

தடம் படமே

தடம் படமே

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட்டான தடம் படத்திலேயே உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்க வேண்டிய் இருந்தது. ஆனால், கால்ஷீட் காரணமாக அந்த படம் அருண் விஜய்யிடம் சென்றது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் படத்தை மகிழ் திருமேனி இயக்கி இன்று வெளியாகி உள்ளது.

அரசியல் படங்கள்

அரசியல் படங்கள்

ராஜேஷ் இயக்கத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடி படங்களில் நயன்தாரா, ஹன்சிகா என முன்னணி நடிகைகளுடன் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் சமீப காலமாக மனிதன், நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன், மாமன்னன் என அரசியல் படங்களாக நடித்து வருகிறார். தனது அடுத்த அடிக்கான முயற்சியில் முழுமையாக இறங்கி விட்டார் உதயநிதி ஸ்டாலின் என சினிமா வட்டாரத்தில் பெரிய பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.

வாழ்த்திய ஆர்யா

வாழ்த்திய ஆர்யா


உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள கலகத் தலைவன் படத்தை வாழ்த்தி நடிகர் ஆர்யா படம் வெற்றிப் பெறட்டும் பார்ட்னர் என ட்வீட் போட்டுள்ளார். மேலும், ஆர்யாவை வைத்து மீகாமன் படத்தையும் டெடி படத்தில் வில்லனாக நடித்த இயக்குநர் மகிழ் திருமேனியையும் ஆர்யா வாழ்த்தி உள்ளார்.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

அந்தாளு உன்னை ரோஸ்ட் பண்ணிட்டு இருக்கான்.. ஆனால், நீ வாழ்த்திட்டு இருக்க, உன் மனசே மனசு தான் வாத்தியாரே என்றும் நீங்க தானே கேப்டன் படத்தை நைஸா தள்ளிவிட்டு உங்க பார்ட்னரை ஏமாத்துனீங்க என ரசிகர்கள் ஆர்யாவின் ட்வீட்டுக்கு கீழ் கிண்டல் செய்து வருகின்றனர்.

தெய்வமே

தெய்வமே

அந்த மனசு இருக்கே.. ரொம்ப நல்ல மனசு ஆர்யா என, வடிவேலு அம்மா அப்பாவுக்கு சூடம் காட்டுவது போன்ற காமெடி காட்சியை போட்டு தெய்வமே என ட்ரோல் செய்து வருகின்றனர். கலகத் தலைவன் படம் கொஞ்சம் சுமாரா இருக்கட்டும் ஆர்யா இன்னைக்கு நைட் எப்படி வச்சு செய்வாருன்னு வெயிட் பண்ணி பாருங்க என கமெண்ட் செக்‌ஷனே கலகலப்பாக மாறி உள்ளது.

பங்கம் பண்ண உதயநிதி

பங்கம் பண்ண உதயநிதி

இதற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேப்டன் படத்தை பங்கமாக உதயநிதி ஸ்டாலின் கலாய்த்து இருந்தார். டெடி டைரக்டர் என்றதுமே சக்தி சவுந்தர்ராஜன் படத்தை பார்க்காமலே வாங்கி ரிலீஸ் பண்ணிட்டேன். பார்ட்னர் படத்தை பார்த்துட்டு சொல்லுங்க என சொல்லி இருந்தார் ஆர்யா. ஆனால், படத்தை பார்த்து விட்டு அவரும் எனக்கு கால் பண்ணல, நானும் அவருக்கு கால் பண்ணல என்றார். மேலும், சமீபத்தில் சந்தித்த போது, இதுக்கு டெர்மினேட்டரையே திருப்பி எடுத்து வைத்திருக்கலாமே என்றேன் என வெளிப்படையாக கலாய்த்து பேசியிருந்தார் உதயநிதி ஸ்டாலின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X