பயில்வான் உடம்பே சண்டையால் ஆனதோ? வாயை தொறந்தாலே அக்கப்போர்தான் நடக்கும்போல!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜியை திட்டி தீர்த்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் அர்ச்சனாவுக்கும் பாலாஜிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறுகிறது.
கேபியிடம் ஆரம்பித்த பாலாஜி அர்ச்சனாவிடம் கொண்டு போய் முடித்தார். எல்லோரும் தன்னுடைய பெயரை கெடுக்க சதி செய்வதாகவும் கூறினார் பாலாஜி.

காண்டான அர்ச்சனா
நேற்று ஆரியிடம் நடந்து கொண்டதை போல இன்று மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை டார்கெட் செய்துள்ளார் பாலாஜி. ஆனால் அர்ச்சனா பாலாஜிக்கே டஃப் கொடுக்கிறார். என்னை அக்கா என அழைக்காதே அர்ச்சனா என்று சொல் என செம காண்டாகிவிட்டார். இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளையாடிட்டிங்களே..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக் பாஸ் கால் சென்டர் கான்செப்ட் கேம் சொல்லி.. பாலாஜி கால் சென்டரில் விளையாடிட்டிங்களே பிக் பாஸ்! படங்கள் 3 & 4.. பாலாஜி மற்றும் அர்ச்சனா ரியாக்ஷன் இவர்கள் பாணியில் இன்றைய பிக் பாஸ் புரமோஷன்.. என பதிவிட்டுள்ளார்

எல்லாம் சரி ஆயிடும்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவங்க எல்லாம் கூட்டு சேர்ந்து பேசுனா தப்பு இல்ல.. ஆனா அர்ச்சனா, ரியோ, நிஷா, சோம், ரமேஷ் இவங்க கூட்டு சேர்ந்து பேசுனா மட்டும் என்ன தப்பு.. தப்புனா ரெண்டு குரூப்பும் தப்பு தான்.. பாலாஜி, அர்ச்சனா இவங்கள தொறத்துனா எல்லாம் சரி ஆயிடும் என்கிறார் இந்த நெட்டிசன்.

நேர்மையான மனிதர்
புரமோவை பார்த்த இவர், இந்த வீட்டில் கையை நீட்டி பேசாத நேர்மையான மனிதர் இவர் மட்டும் தான் என இந்த போட்டோவை ஷேர் செய்து கலாய்த்துள்ளார்.

சாவடிச்சுராதீங்கடா
தயவு செய்து 3 புரமோ போடலானாலும் பராவாயில்லை.. ஆனா 3 வது பிரமோல அம்மா மகன் சென்டிமென்ட் போட்டு தாக்கி.. அதுக்குனு ஒரு பேக் கிரவுண்ட் சாங் வச்சிருப்பியே அத
போட்டு சாவடிச்சிராதிங்கடா யப்பா சாமி
முடியலடா..விட்டுருங்க டா மக்கள் பாவம் டா என கதறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அக்கப்போர்தான்
பாலாஜி சண்டை போடுவதை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வான் உடம்பே சண்டையால் ஆனதோ?... இவன் வாயை தொறந்தாலே அக்கப்போர்தான் நடக்கும்போல! என கூறியுள்ளார்.

பொத்திக்கிட்டுதான் போகணும்
மற்றொரு நெட்டிசனான இவர், குத்தினது அக்காவா இருந்தாலும் பொத்திக்கிட்டுதான் போகணும் என கலாய்த்துள்ளார்.

எக்குதப்புதாண்டா
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எடக்குமடக்கு ஆசாமி!... எப்போதும் எக்குதப்புதாண்டா நீ கம்னு போசாமி.. என கிண்டலடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











