செம நடிப்புடா சாமி.. கைகட்டி வாய் பொத்தி.. பத்துபைசா நடிப்பு.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜியை வச்சு செய்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவிலேயே இன்று சாட்டையை சுழற்றுவது போன்று அதகளப்படுத்தியிருந்தார் கமல். இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரமோவிலும் பாலாஜிக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கொடுப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் புரமோவில் ஆக்ரோஷமாக பேசுகிறீர்கள், ஆனால நிகழ்ச்சியில் எதுவும் இருக்க மாட்டேங்குதே என விளாசியுள்ளனர். மேலும் பக்குவமாய் யாருக்கும் அட்வைஸ் பண்ணாதீர்கள், அரசியல்வாதிகளை விமர்சிப்பது போல் விளாசிவிடுங்கள் என்றும் கூறி வருகின்றனர்.

கடுமையான விமர்சனம் கொடுங்க

கடுமையான விமர்சனம் கொடுங்க

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கமல் சார் இவங்களுக்கு எல்லாம் பக்குவமா அட்வைஸ் பண்ணா இப்படித்தான் சண்டை போட்டுட்டே இருப்பாங்க.. வெளிய எப்படி அரசியல்வாதிகளை கடுமையான விமர்சனம் குடுக்குறீங்களோ அதே மாதிரி பண்ணுங்க.. யாரு தப்பு பண்ணாலும்.. உள்ள சொம்பு வச்சி இருக்கறவன் எல்லாம் நாட்டாமைனு நினைச்சிட்டு இருக்கானுங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

தீ வைத்து கொளுத்தப்படும்

தீ வைத்து கொளுத்தப்படும்

அது எல்லாம் விடுங்க ஆண்டவரே நேத்து ஷிவானிக்கிட்ட
ஆரி கேள்வி கேட்கும் போது ஃபைனலில் பாலா சம்யுக்தா ரம்யா
வரணும்னு உன் ஆசையில் தீய வைக்க இது நடந்தால் பிக்பாஸ் செட்டு அடிச்சி தீ வைத்து கொளுத்தபடும் என எச்சரித்துள்ளார் இந்த நெட்டிசன்.

முகத்திரைகள் கிழியலாம்

முகத்திரைகள் கிழியலாம்

இந்த தடவை ஆரி, பாலா, சம்யுக்தா, சனம், ரம்யா & ரியோ தலைகள் உருளும் போலயே.. ஆனா ஆரிக்கு பாராட்டுக்களுடன், குறும்படம் போட்டால் பாலா, சம்யுக்தா & அர்ச்சனாவின் முகத்திரைகள் கிழியலாம்.. என கூறியுள்ளார்.

ப்யூஸ் போன நேரம்

ப்யூஸ் போன நேரம்

இரண்டாவது புரமோவில் கமல் பாலாஜியை மொக்கை பண்ணியதை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வானுக்கு பல்பு ப்யூஸ் போன நேரம்! என கிண்டலடித்துள்ளார்.

பத்து பைசா நடிப்பு

பத்து பைசா நடிப்பு

கமலுக்கு முன்பு பவ்யமாக நடிக்கும் பாலாஜியை பார்த்த இந்த நெட்டிசன், செம நடிப்புடா சாமி!... கைகட்டி வாய்பொத்தி!,.. பயில்வானின் பத்துபைசா நடிப்பு! என விளாசியிருக்கிறார்.

துடைச்சுக்கோ..

துடைச்சுக்கோ..

புரமோவில் பாலாஜியின் பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், எப்பா பயில்வானே மூஞ்சியில வெளக்கெண்ணெய் வழியுது தொடைச்சுகோ!. என விளாசியுள்ளார்.

புஸ்வானமா?

புஸ்வானமா?

மக்கள் எதிர்பார்ப்புக்கு நீங்கள் கொடுத்த ஜட்ஜ்மெண்ட் எப்படி இருக்குன்னு பார்ப்போம்! நீங்க பட்டாசா? அல்லது புஸ்வானமா? என்று.. காண்போம் இன்று! என கமலுக்கு செக் வைத்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

மொழுவுர மாதிரி

மொழுவுர மாதிரி

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், புரமோ பார்க்கும்போது சாணியில அடிக்கிற மாதிரி இருக்கு.. எபிசோடு பார்த்தா சாணி மொழுவுர மாதிரி இருக்கு ஆண்டவரே... என கமலை விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

தொட முடியாது!

தொட முடியாது!

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் என்னாச்சு ஆரிக்கு 2 நாளா சிரிச்சுக்கிட்டே ஊசி போடறாரு! இது ரொம்ப நல்லா இருக்கு அவருடைய வழக்கமான விளக்கவுரைய விட! இத எல்லா பிரச்சினைலையும் செஞ்சீங்கனா உங்கள தொட முடியாது! என கூறியுள்ளர் இந்த நெட்டிசன்.

சைலன்ட் பாய்சன் அர்ச்சனா

சைலன்ட் பாய்சன் அர்ச்சனா

பாலாவது ஆரியிடம் நேரடியாக சண்டையிடுகிறான்.. இந்த அர்ச்சனா ஆரி பின்னாடி புறம் பேசி எல்லா நாமினேஷன்லையும் அவரை குத்துகிறார்... தேவைப்பட்டால் ஆரியை எதிர்க்க பாலாவிடம் கூட பேசுகிறாள்.. சைலன்ட் பாய்சன் அர்ச்சனா என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

கற்றுக்கொடுங்கள்..

கற்றுக்கொடுங்கள்..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வானுக்கு மரியாதை என்ன என்பதை கற்றுக்கொடுத்துவிட்டு போனால் நன்றாக இருக்கும் கமல் சார் என கூறியுள்ளார்.

நாங்களும் நம்பிட்டு இருக்கோம்

நாங்களும் நம்பிட்டு இருக்கோம்

புரமோவில் ஆரி, கமல் சார் சாட்டை வச்சுருக்கார் என்று கூறியதை பார்த்த இந்த நெட்டிசன், சார் சாட்டை வச்சிருக்காரு எல்லாருக்கும்னு நாங்களும் நம்பிட்டு இருக்கோம்.. எபிசோடுலதான் தெரியும்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

கண்டனங்களை பதிவு செய்வாரா?

கண்டனங்களை பதிவு செய்வாரா?

சம்யுக்தா எலிமினேட் ஆகியிருக்காங்க என்று நியூஸ் வந்திருக்கு.. வளர்ப்பு சரியில்லை என்று சொன்ன சம்யுக்தா;
மைக்கை மறைத்து பேசி விதிமுறையை மீறிய அர்ச்சனா;
ஆரிக்கு காலைத்தூக்கி காட்டிய பாலா; இவர்களில் ஒருவருக்காவது குறும்படம் போட்டு காட்டி கடுமையான கண்டனங்களை பதிவு செய்வாரா கமல் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X