என்ன பெரிய புஷ்பா டான்ஸ்.. உனக்கு பாக்யராஜ் டான்ஸ் தெரியுமா? ரசிகர்கள் செம கலாய்.. வீடியோ பாக்கனுமே

சென்னை: இணையவாசிகளுக்கு ஒரு விஷயம் கிடைத்தால் போதும், அதனை பிரித்து நார் நாராக கிழித்து தொங்கவிட்ட பின்னர்தான், அடுத்த வேலையைப் பார்ப்பார்கள். அதில் பல நல்லதும் நடைபெற்றுள்ளது, பல விபரீதங்களும், பல முகம் சுழிக்கவைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது. இதில் இப்போது நடைபெற்றுள்ள சம்பவம் செம ஃபன்னான சம்பவம் என்றுதான் கூறவேண்டும். புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆனதும்தான் ஆனது, புஷ்பா 2 படத்தில் இடம் பெற்ற பாடலை ரசிகர்களும் இணையவாசிகளும் வறுத்தெடுத்து வருகின்றார்கள் என்றுதான் கூறவேண்டும்.

புஷ்பா 2 படத்தில் இடம் பெற்ற பாடல்களிலேயே, பீலிங்ஸ் பாடல் பலராலும் விமர்சிக்கப்பட்ட பாடல். அதற்கு பாடல் வரிகளும் நடன அசைவுகளும் ஒரு காரணம். ராஷ்மிக மந்தனாவின் கவர்ச்சியான நடனமும் ஒரு காரணம். இந்தப் பாடலில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின், கவர்ச்சியான நடனம், அந்த பாடல்களுக்கு ரசிகர்களும் கவர்ச்சியான நடன அசைவுகளை பதிவு செய்து ரீல்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர்.

bhagyaraj pushpa 2 allu arjun 2

இப்படியான நிலையில், இணையவாசிகள், புஷ்பா 2 பாடலையும் அதன் நடன அசைவுகளையும் திரைக்கதை மன்னர் பாக்யராஜ் நடித்த படங்களில் அவரது நடன அசைவுகளை, இணையத்தில் பதிவிட்டு, என்ன பெரிய புஷ்பா டான்ஸ்? உனக்கு பாக்யராஜ் டான்ஸ் தெரியுமா? என கலாய்த்தது மட்டும் இல்லாமல், அவர் நடித்த படங்களில் அவர் பாடல்களுக்கு டான்ஸ் ஆடிய வீடியோக்களையும் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

bhagyaraj pushpa 2 allu arjun 2

பாக்யராஜ்: திரைக்கதை மன்னர் பாக்யராஜ், ஒரு தொழில்முறை நடிகர் இல்லை, ஆனாலும் தான் நடிக்கும் படங்களில் தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரங்களின் அழுத்தத்தை புரிந்து கொண்டு அட்டகாசமான நடிப்பினை பல படங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார். பாக்யராஜ் தனது கதைகளில் தானே நடிக்கத் தொடங்கி, அதன் பின்னர், மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்தார்.

bhagyaraj pushpa 2 allu arjun 2

தொழில்முறை நடிகர்: ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், பாக்யராஜ் ஒரு தொழில்முறை நடிகர் இல்லை என்பதால், பாடல்களுக்கு நடனம் ஆடும்போது, மற்ற நடிகர்களைப்போல் பலராலும் பாராட்டப்படும் நடன அசைவுகளை அவர் ஆடியது கிடையாது. அப்படி இருக்கும்போது, அவரது நடன அசைவுகளை அன்றைக்கு இருந்த ரசிகர்கள் யாரும் பெரிதாக கிண்டல் செய்தது இல்லை. ஆனால் இன்றைக்கு தொழில்முறை நடிகர்கள் அதிகமாகிவிட்டதால், அவர்களின் நடன அசைவுகளோடு பாக்யராஜ் நடனத்தை ஒப்பிட்டு இணையவாசிகள் பதிவிடுகின்றனர்.

bhagyaraj pushpa 2 allu arjun 2

கவர்ச்சி நடனம்: இதில் புஷ்பா பாடலுடன், பாக்யராஜ் நடனத்தை ஒப்பீடு செய்ய முக்கிய காரணமே, கவர்ச்சியான நடன அசைவுகள்தான். அதன்படி பார்த்தால் பாக்யராஜ் படங்களில், இடம் பெற்ற பாடல்களில் பாக்யராஜ் கவர்ச்சியாக, பல பாடல்களில் நடனம் ஆடியுள்ளார்.

bhagyaraj pushpa 2 allu arjun 2

குறிப்பாக பல நடிகைகளுடன் நடனமாடுவதைப்போல் எல்லாம் நடித்துள்ளார். இது போன்ற வீடியோக்களைத்தான் இணையவாசிகள் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.

bhagyaraj pushpa 2 allu arjun 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X