பிக் பாஸ் வீடா? பைத்தியக்கார ஆஸ்பத்திரியா? அடங்கப்பா.. ஒண்ணுமே புரியலையே என புலம்பும் ரசிகர்கள்!

சென்னை: இதுவரை இல்லாத வகையில் புது முகங்களை அறிமுகப்படுத்தி வேற மாதிரி ஷோவை கொண்டு போக நினைத்து ஏதோ மாறி ஷோ போய் கொண்டிருப்பதாக பிக் பாஸ் ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர்.

குழந்தைங்களலாம் எவன்டா வீட்டுக்குள்ள விட்டது என இசைவாணி பற்றி அபிஷேக் அப்படி பேசுகிறார்.

பரதநாட்டியம் ஆடுவேன் என வாயால் அபிஷேக் நடனமாட பாத்ரூமில் நிஜமாவே பிரியங்கா டான்ஸ் ஆடுகிறார். இது பிக் பாஸ் வீடா? இல்லை பைத்தியக்கார ஆஸ்பத்திரியா என்கிற கேள்வி ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கஸ்தூரி கலாய்

கஸ்தூரி கலாய்

தன்னை போல ஒரு எபிசோடு கூட இந்த பிக் பாஸ் சீசன் 5ஐ பார்க்காதவர்கள் எத்தனை பேர் என முன்னாள் போட்டியாளரான கஸ்தூரியே மரண கலாய் கலாய்க்கும் அளவுக்குத் தான் இந்த சீசன் இதுவரை சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் இருந்து வந்த போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பல அனுபவங்களை கொடுத்து என்டர்டெயின் பண்ணாமல் குழாயடி சண்டையை போட்டுக் கொண்டு எரிச்சலை கிளப்புகின்றனர்.

மீன் மார்க்கெட்

மீன் மார்க்கெட்

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஃபீலிங்கே பலருக்கும் போய் விட்டது. ஏதோ மீன் மார்க்கெட்டுக்குள் இருப்பது போல இவர்கள் கத்தி பேசி ஸ்ட்ராட்டஜி, கேம் இப்படித்தான் விளையாடணும், நான் தான் இந்த கேமையே வேற மாறி கொண்டு போகிறேன் என ஏகப்பட்ட அப்பாடக்கர் வேலைகளை எல்லாம் செய்ய ஓட்டு போடக் கூட ரசிகர்களுக்கு இந்த முறை பிடிக்காமல் போனது.

குழந்தைகள் பார்க்க முடிவதில்லை

குழந்தைகள் பார்க்க முடிவதில்லை

கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரி அர்ஜுனன் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றிருந்தார். குழந்தைகள் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்த்தனர். ஆனால், இந்த சீசனில் ஆரி மாதிரி கூட இல்லை பாலாஜி முருகதாஸ் மாதிரி கூட ஒரு டீசன்ட் பிளேயரும் இல்லை என்பதே ஏகப்பட்ட ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

ராஜுவை ஹீரோவாக்குறாங்க

ராஜுவை ஹீரோவாக்குறாங்க

பிரியங்கா மற்றும் அபிஷேக் ராஜா பண்ணும் இம்சை எல்லாம் தான் ராஜு ஜெயமோகனை இந்த சீசனில் ஹீரோவாக்க காரணம் என்றும் சைலன்ட்டாக இவர்களின் பேச்சுக்கு கவுன்ட்டர் கொடுத்தே ராஜு ஹீரோவாகி விடுகிறார் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன. அபிஷேக் மற்றும் பிரியங்காவுக்கு ராஜு ஷைன் ஆவதும் பிடிக்கவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது.

ஒண்ணுமே புரியலையே

ஒண்ணுமே புரியலையே

யார் என்ன பேசுறாங்க? எதுக்கு சண்டை போடுறாங்க? திடீர் திடீர்னு ஏன் மாறுறாங்கன்னு ஆதியும் அந்தத்தையும் காட்டாமல் கண்ட மேனிக்கு பிக் பாஸ் எடிட்டர் தூக்க கலக்கத்தில் எடிட் செய்வதால் நிகழ்ச்சி எப்படி போகிறது என்ன ஆகும் என்ன பிரச்சனை என ஒண்ணுமே புரியலையே என பிக் பாஸ் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

பைத்தியக்கார ஆஸ்பத்திரி

பைத்தியக்கார ஆஸ்பத்திரி

இந்த சீசனை பார்க்கும் ரசிகர்கள் இது பிக் பாஸ் வீடா? அல்லது பைத்தியக்கார மருத்துவமனையா? என்கிற கேள்வியை பகிரங்கமாக கேட்கும் அளவுக்கு மிகவும் மோசமாக போட்டியாளர்களின் அணுகுமுறை இருப்பதாகவும் கண்டபடி கேவலமாக விளையாடாமல் கருத்தாக மைண்ட் கேமை டீசன்ட்டாக விளையாடினால் தான் மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தருவார்கள் என்றும் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

கமல் கண்டிப்பாரா

கமல் கண்டிப்பாரா

பிக் பாஸ் கேமை இப்படித்தான் விளையாட வேண்டும் என அந்த நிகழ்ச்சியை ஒரு எபிசோடு கூட பார்க்காததாக சொன்ன சிலர் மோசமான மனநிலையுடன் விளையாடி வருவதை இந்த வார இறுதியில் கமல் கண்டிப்பாரா? குறிப்பிட்ட நபர்களின் அட்டூழியங்களுக்கு குறும்படம் போட்டு வெளுத்து வாங்குவாரா? என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X