பிரயோசனம் இல்லாத ஆட்டு தாடி.. எதுக்கு இந்த கேப்டன் பதவி.. பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்!

சென்னை: இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், பிக் பாஸ் வீட்டில் எதுக்கு கேப்டன் பதவி என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

பிக் பாஸ் வீட்டை வார வாரம் ஒரு நபர் நிர்வகிக்க வேண்டும் என்கிற ரூல் இருக்கிறது.

யார் கேப்டனாக வந்தாலும், அவங்க பேச்சை கேட்காமல், எல்லோரும் அவங்களை வச்சி செய்யத்தான் அந்த பதவி என்பது வேறு கதை.

பாலாஜியின் கையாள் அனிதா

பாலாஜியின் கையாள் அனிதா

பாலாஜி முருகதாஸின் புதிய கையாளாக மாறியுள்ள அனிதா சம்பத், ஆரம்பத்திலேயே சனம் ஷெட்டி உடனும், ஆரி உடனும் சண்டையை ஆரம்பித்தது. ரியோ டீமில் இருந்து கொண்டே வேவு பார்க்கும் வேலையை அனிதா ரகசியமாக செய்து வருகிறார் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தப்பித்த ஆரி

தப்பித்த ஆரி

ஆரம்பத்தில் ஆரியை கிச்சன் டீமில் இருந்து கொண்டு நல்லா வச்சு செய்தார் அனிதா சம்பத். சம்யுக்தா, பாலா அண்ட் டீம் இந்த வாரம் பெரிய பிரச்சனையை கிளப்புவார்கள் என எதிர்பார்த்த நிலையில், சுசித்ரா கடைசியாக அந்த வேலையை செய்த போதும், தீபாவளி கொண்டாட்டத்தால் ஆரி சூப்பரா எஸ்கேப் ஆகி விட்டார்.

என்ன ஆஜீத் கேப்டனா

என்ன ஆஜீத் கேப்டனா

"மிக்சர் முழுங்கி ஆஜித் கேப்டன் ஆனா நல்லா இருக்குமா? யோவ் அவன் இப்ப பயில்வானுக்கு சொம்பு தூக்கதான் லாயக்கு!" என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஜெம்ஸ் மிட்டாய் டாஸ்க்கில் மட்டும் ஜெயித்து விட்டதால் ஆஜீத்துக்கு கேப்டன் பதவியா? கூடாது என ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

மனநல காப்பாகம்

மனநல காப்பாகம்

பிக் பாஸ் சொல்லியும் கேட்காமல், டாஸ்க் சரியா கன்வே ஆகலை.. யார் வேணா திருடலாம்னு நினைச்சேன் என பாலா சொல்வதை கேட்ட ரசிகர்கள், முதல்ல அவரை கொண்டு போய் மனநல காப்பாகத்தில் சேர்த்து ட்ரீட்மென்ட் கொடுங்க.. வாழ்க்கையில சந்திச்ச பல பிரச்சனைகளால் மூளை குழம்பி போயிருக்கார் என கிண்டல் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டு டைட்டானிக் ஜோடி

பிக் பாஸ் வீட்டு டைட்டானிக் ஜோடி

எல்லாத்தையும் விட பிக் பாஸ் வீட்டின் டைட்டானிக் ஜோடி இவங்க தான் என இந்த நெட்டிசன் பாலாவும் சுச்சியையும் வைத்து செமயா கலாய்த்து வருகின்றனர். டேய் இதை மட்டும் கேட் வின்ஸ்லட் பார்த்தா, டிகாப்ரியோவுக்கு பதிலா அவங்க கடலில் விழுந்து செத்துருப்பாங்க என பங்கம் பண்ணி வருகின்றனர்.

ஷிவானிக்கு இருக்கு

ஷிவானிக்கு இருக்கு

ஷிவானி கூட கேபி சண்டை போட்டே அடுத்த வாரம் கேப்டன் ஆகப் போறாங்க, கேபி மட்டும் கேப்டன் ஆனால், ஷிவானிக்கு இருக்கு என கேபியின் ரசிகர்கள் ஆதரவு கரங்களை உயர்த்தி வருகின்றனர். பார்க்கலாம் என்ன நடக்கப் போகுது என்று, எவ்வளோவோ பார்த்தாச்சு!

ஆட்டு தாடி

ஆட்டு தாடி

பிக் பாஸ் வீட்டில் கேப்டன் பதவி எதுக்கு இருக்குன்னே தெரியல? என்றும் அது ஒரு பிரயோஜனமே இல்லாத ஆட்டுத் தாடி என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அடுத்த வாரம் கேபி குழந்தையை கேப்டன் ஆக்கி எவிக்‌ஷனில் இருந்து காப்பாத்த பிக் பாஸ் பிளான் பண்ணிட்டார் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X