அட்மின் குசும்பன்.. ஜாக்கிரதையா எல்லாத்தையும் ப்ளர் பண்ணிட்டான்.. பாயிண்டை பிடித்த நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், கடிதங்கள் ப்ளர் செய்யப்பட்டிருப்பதை கச்சிதமாய் கண்டுபிடித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவில் ஹவுஸ்மெட்ஸ் கைகளில் பேப்பரும் பேனாவையும் கொடுத்து கடிதம் எழுத வைத்து கண்ணீர் விட வைத்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், புரமோவை மரண பங்கம் செய்துள்ளனர். மீண்டும் அழுகாச்சி காட்சிகளை காட்டி அழ வைக்காதீர்கள் என கெஞ்சியுள்ளனர்.

முன்ஜாக்கிரதையாக ப்ளர்

முன்ஜாக்கிரதையாக ப்ளர்

மேலும் போட்டியாளர்கள் எழுதும் போது அவர்களின் கடிதத்தையும் ப்ளர் செய்து காட்டியுள்ளனர். கடந்த முறை சனம் ஷெட்டி எழுதிய கடிதம் பூதாகரமானதால் இப்படி முன் ஜாக்கிரதையாக ப்ளர் செய்திருப்பதாக கூறியுள்ளனர் நெட்டிசன்கள்.

நடத்துங்க நடத்துங்க..

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பரிச்சைக்கு பிரிப்பேர் ஆகிறமாதிரி பேப்பரும் கையுமா ரொம்பவும் சீரியசா ஆகிட்டாங்களே.. நடத்துங்க நடத்துங்க என கூறியுள்ளார்.

சோறு கிடைக்குதேன்னு..

நாங்கெல்லாம் சொந்தம் பந்தம் பக்கத்துல இருந்தும் தீபாவளி கொண்டாட காசு இல்லாம அல்லாடிட்டு இருக்கோம், உங்களுக்காவது மூனு வேலையும் உள்ள சோறு கிடைக்குதேன்னு நினைச்சி சந்தோசப்படுவீங்களா என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஒரே கலங்கலா தெரியுது..

மற்றொரு நெட்டிசனான இவர், எல்லாம் ப்ளராகி தெரிவதை பார்த்து, யோவ் பிக்பாசு என்ன பேப்பர்ல தண்ணி ஊத்திட்டீங்களா? ஒரே கலங்கலா தெரியுது என கேட்டுள்ளார்.

டாஸ்க்

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடேய் என்னடா இது எல்லாம், ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் கொண்டாடவாடா உள்ள வந்து இருக்கானுங்க.. இதுக்கு சீரியல் பாத்துட்டு போயிடலாம்டா.. டாஸ்க் குடுங்கடா..
அழுகுறத காட்டுறதுல கூட காட்டுன மூஞ்சையே காட்டுரிங்களே என பங்கம் பண்ணியுள்ளார்.

எதுக்குயா மூக்க சிந்துறீங்க

மற்றொரு நெட்டிசனான இவர் நல்ல நாளும் அதுவுமா எதுக்குயா மூக்க சிந்துறீங்க.. முடியாட்டி வீட்டுக்கு மூட்டைமுடிச்சை கட்டுங்கள் என விளாசியுள்ளார்.

பிசிகல் டாஸ்க்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கடைசி வரை பிசிகல் டாஸ்க் இல்ல அதான.. ஒன்னு பேச சொல்லி எல்லாரையும் சண்டை போட வைக்குற.. இல்ல அவங்க சோகத்தை சொல்லி அழ வைக்குற.. என கலாய்த்துள்ளார்.

பாடா படுத்துறீங்க

இரண்டாவது புரமோவை பார்த்து கடுப்பான இந்த நெட்டிசன், யோவ்!...யோவ் மறுபடியும் அழுகாச்சி சீனா!... ஏன்யா இப்படி பாடா படுத்துறீங்க என கேட்டுள்ளார்.

தெலுங்கு பிக்பாஸ் பாருடா!

பிக்பாஸின் இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டேய் பிக் பாஸ் இதெல்லாம் ஒரு டாஸ்க்!!!!
போய் தெலுங்கு பிக்பாஸ் பாருடா! இந்த இரண்டு படங்கள்தான் சுரேஷ் வெளியேற்றப்பட்ட பிறகு மக்களின் ரியாக்ஷன்.. என இந்த போட்டோவை பகிர்ந்துள்ளார் இந்த நெட்டிசன்.

அட்மின் குசும்பன்!

புரமோவில் கடிதம் ப்ளர் செய்யப்பட்டிருப்பதை பார்த்த இந்த நெட்டிசன் அட்மின் குசும்பன்! ஜாக்கிரதையா முன்னாடியே எல்லாத்தையும் ப்ளர் பண்ணிட்டான்.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X