இந்த டாஸ்க்குக்கு எல்கேஜி ஸ்கூல் பிள்ளைங்களை உள்ள அனுப்பி இருக்கலாம்.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் டாஸ்க்கை கழுவி ஊற்றி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் பிக்பாஸ் ஃபன் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். இதில் சிறு குழந்தைகள் விளையாடுவதை போல கையை நீட்டி ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் எல்கேஜி குழந்தைகள் கூட இதனை செய்து விடுவார்கள், இதற்கு பெயர் டாஸ்க்கா என கேட்டு வருகின்றனர்.

சிரிப்பு சிரிப்பாதான் வருது..
இந்த பிக்பாஸ் விளையாட்டையே புரிந்து கொள்ளாத போட்டியாளர்களை நினைக்கும் போது!... நமக்கு சிரிப்பு சிரிப்பாதான் வருது!... நம்ம ஆரியை போல என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

சேவ் ஆகுறாருன்னு காண்டு
புரமோவை பார்த்த இவர், ஆரி எத்தனை வாட்டி நாமினேஷன் ஆனாலும் ஆரி ஃபஸ்ட் சேவ் ஆகுறாருன்னு காண்டு வேற ஏதும் கிடையாது என கூறியுள்ளார்.

டாஸ்க் வைக்கலையே..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா மைண்ட் வாய்ஸ்... நான் இருக்கும் போது இந்த மாதிரி டாஸ்க் வைக்கவில்லையே என கூறியுள்ளார்.

யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இனி பாலா ஆரி சண்டை வந்தாதான் உண்டு. இல்லைன்னா வெறும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். ஏற்கனவே பாஸு சண்டை வர்ற மாதிரி டாஸ்க் யோசிக்க ஆரம்பிச்சிட்டாராம்.. என கூறியுள்ளார்.

மீதி எல்லாமே நரி..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி மட்டும்தான் நல்ல நேர்மையான பிளேயர் மீதி எல்லாமே நரி தான் என கூறியுள்ளார்.

ஒழுங்கா கொடுக்க தெரியல..
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதெல்லாம் டாஸ்க்கா.. இந்த டாஸ்க் கொடுக்குறதுக்கு எல்கேஜி ஸ்கூல் பிள்ளைங்களை உள்ள அனுப்பி இருக்கலாம்
பிக்பாஸ்க்கு ஒரு டாஸ்க் கூட ஒழுங்கா கொடுக்க தெரியல என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











