Dhanush Son: தமிழ் ராக்கர்ஸ் அட்மின் தனுஷ் மகன்களா.. நெட்டிசன்ஸ் உங்க அலப்பறைக்கும் ஒரு அளவு இல்லையாப்பா!
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான படம் குபேரா. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ் உடன் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா என பலர் நடித்துள்ளார்கள். படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் நீளம் தான் மிகவும் அதிகமாக உள்ளது என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று தனுஷ் உடன் அவரது மகன் லிங்கா படம் பார்க்க தியேட்டருக்கு வந்திருந்தார். இது தொடர்பாக வெளியான புகைப்படங்களைக் கொண்டு தமிழ் ராக்கர்ஸின் அட்மின் தனுஷின் இளைய மகன் லிங்கா தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சினிமா உலகத்திற்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ள விஷயம் என்னவென்றால் அது பைரசி பிரச்னைதான். படம் வெளியான நாளில் திருட்டுத்தனமாக தியேட்டரில் இருந்து முழு படத்தையும் வீடியோவாக எடுத்து அதை இணையத்தில் சுழல விடுகிறார்கள். இதனை பலரும் செய்து வந்தாலும், தமிழ் ராக்கர்ஸ் என்ற பைரசி குழு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்ததாக உள்ளது.
இன்றைக்கு டெலிகிராமில் உள்ளூர் படங்கள் தொடங்கி உலகப் படங்கள் வரை தியேட்டர் பிரிண்ட்டில் இருந்து ஹெச்.டி பிரிண்ட் வரை இணையவாசிகளுக்கு கிடைத்துவிடுகிறது. தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க மாட்டோம் என இருப்பவர்கள், ஓடிடி தளங்களை சப்ஸ்கிரைப் செய்ய மாட்டோம் ஆனால் எல்லா புது படங்களும் பார்க்க வேண்டும் என்ற மன நிலையில் இருப்பவர்களுக்கு இந்த பைரசி குழு வரப்பிரசாதமாக மாறிவிடுகிறது. இவர்களைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் புற்றீசல்கள் போல தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள்.

பைரசி பிரச்னை: இந்த பைரசி டீம்களால் அனைத்து திரையுலகமும் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. பல படங்கள் வசூல் ரீதியாக தோல்விப் படமாக மாற இந்த பைரசி டீம்கள் மிகவும் முக்கியமான காரணம். இது தொடர்பாக திரையுலகத்தினர் சார்பிலும் புகார்கள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களை முற்றிலுமாக ஒழித்த பாடில்லை. காவல்துறையும் அவர்களால் முடிந்த அளவுக்கு முழு மூச்சாக இதை ஒழிக்க போராடி வருகிறார்கள்.
தனுஷ் இளைய மகன்: இந்நிலையில் நெட்டிசன்கள் மிகவும் ஜாலியாக இணையத்தில் ஒரு பதிவை பகிர்ந்து வருகிறார்கள். அதாவது, நேற்று குபேரா படம் வெளியானது. முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்க்க தனுஷ் மற்றும் படக்குழுவினர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு வந்தார்கள். தனுஷ் உடன் அவரது இளைய மகன் லிங்காவும் வந்திருந்தார். தனுஷ் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கும் போது லிங்கா தனது மொபைலை திரையை நோக்கி வைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். லிங்கா இது போல பல நிகழ்ச்சிகளிலும் வீடியோ எடுத்துள்ளார்.
தமிழ் ராக்கர்ஸ் அட்மின்: இது தொடர்பான புகைப்படங்களை தொகுத்த இணையவாசிகள், தமிழ் ராக்கர்ஸ் டீமின் அட்மின் தனுஷின் இளைய மகன் லிங்கா தான் என கலாய்த்து வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் மீம்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் சிலர் கலாய்க்கிறதுக்கும் ஒரு நியாயம் வேண்டாமா என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











