சபாஷ் சரியான போட்டி.. யாருக்கு தனுஷ் vs ஜூனியர் என்டிஆருக்கா?.. இல்லை Ai vs Ai.. முடியல முருகா!

சென்னை: முருகன் வடக்கில் பிறந்தார் என்றதுமே முருகன் தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் சொந்தம் என்கிற ரீதியில் ஜூனியர் என்டிஆர் பட அறிவிப்புக்கு எதிராக சீமான் முதல் கோலிவுட் ரசிகர்கள் என பலரும் பொங்கினர்.

"கல் தோன்றா மண் தோன்றா காலத்தே கனத்த புகழோடு தோன்றிய குடி எம் குடி" என்றும் இமய மலையே எங்க தமிழர்கள் ஆண்ட இடம் தான் என்று சொல்ல முடியாமல் தமிழ்நாட்டுக்குள் உலகையே சுற்றிய முருகனை சுருக்க பார்த்து விட்டனர்.

Netizens trolls Dhanush s Tamizh Murugan Announcement Video done by AI

ராமாயணம், மகாபாரதத்தை முடிந்த வரை புராண கதைகளாகவும் அந்த கதைகளில் இருந்து ஏகப்பட்ட கிளை கதைகளை சுட்டு சினிமா படங்களாகவும் உருவாக்கி முடித்து விட்டனர். இந்நிலையில், ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவும் முருகன் பக்கம் திரும்பி விட்டதே என பக்தர்கள் இதென்னடா சேயோனுக்கு வந்த சோதனை என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஜூனியர் என்டிஆருக்கு போட்டியாக: முருகன் வடக்கில் பிறந்து தெற்கில் வழிபடத் தொடங்கிய கடவுள் என்கிற அறிவிப்புடன் த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து 'காட் ஆஃப் வார்' எனும் படத்தை தெலுங்கில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இமய மலையில் தான் முருகன் பிறந்தார் உங்க சிவாஜி நடித்த திருவிளையாடல் படத்தையே பாருங்க என டோலிவுட் ரசிகர்கல் கம்பு சுத்த அந்த படத்தில் சிவனும் ஒளவையாரும் என்ன சமஸ்கிருதத்திலா பேசினார்கள் என்கிற கேள்வியையும் தமிழ் சினிமா ரசிகர்கள் வைத்து பதிலடி கொடுத்து வந்தாலும் முருகன் தமிழ் கடவுள் என்பதை 'தமிழ் முருகன்' என்கிற தலைப்பை வைத்தே தனுஷ் தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

இரண்டு பக்கமும் அடி: தனுஷ் முருகனாக நடிக்க முடிவு செய்து வெற்றிமாறன் இயக்கத்தில் அறிவிப்பை வெளியிட்ட நிலையில், நேற்று முதல் சமூக வலைதளங்களில் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் ஒரு பக்கம் ட்ரோல் செய்ய ஆரம்பித்தால் இங்கே கோலிவுட்டில் தனுஷ் ரசிகர்களே வடசென்னை 2 படத்துக்கு பதிலாக அசுரன் எடுக்கும் போதே எதிர்த்தவர்கள் தற்போது தமிழ் முருகன் படத்துக்கும் ஏகப்பட்ட எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். சிம்புவை வைத்து அரசன் படத்தை எப்போது முடித்து விட்டு வெற்றிமாறன் தனுஷை வைத்து தமிழ் முருகன் படத்தை எடுக்க ஆரம்பிப்பார். இந்த பிரம்மாண்ட படம் எப்போது நிறைவடைந்து தியேட்டருக்கு வரும் என ஏகப்பட்ட கேள்விகளை கிளப்பி வருகின்றனர். எழுத்தாளர் அறிவுமதி எழுதிய 'தமிழ் முருகன்' நாவலை தழுவியே இந்த படத்தை வெற்றிமாறன் எடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டைக்கு வரும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்: அந்த பக்கம் ஜூனியர் என்டிஆர் என்றால் இந்த பக்கம் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் தனுஷுக்கு எதிராக நெகட்டிவிட்டியை பரப்பி வருகின்றனர். ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சேயோன் படத்தில் நடித்து வரும் நிலையில், தனுஷ் இப்போ முருகர் கதையை கையில் எடுத்தது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர். மேலும், சிவகார்த்திகேயன் கண்டிப்பாக ஃபிளாஷ்பேக் போர்ஷன் வைத்து முருகக் கடவுளாக சேயோன் படத்தில் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.

ஏஐ முதல் சாய் அபயங்கர் ட்ரோல் வரை: ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் வாரணாசி படத்தின் அறிவிப்புக்கு சிஜி வேலைகல் மூலம் அறிவிப்பு வெளியானது. ஆனால், தனுஷ் - வெற்றிமாறன் படத்தின் அறிவிப்பை வெறும் ஏஐ உதவியுடன் உருவாக்கி வெளியிட்டுள்ளனர் என ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், சாய் அபயங்கர் உதயநிதியின் ஓடி வருகிறார் பாடல் போல முருகர் படத்துக்கு பாட்டு போட்டுள்ளார் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். எதுவாக இருந்தாலும் வாடிவாசல் போல ஆகாமல் படத்தை எடுத்து வெளியிட்டால் போதும் என்றே ரசிகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர். முருகனாக நடித்து முடித்ததும் தனுஷ் அரசியலுக்கு வருவாரா? என்றும் கேட்கத் தொடங்கியுள்ளனர். முடியல முருகா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X