இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. பிப்ரவரி 6 ஜனநாயகன் ரிலீஸ்னு உருட்டுனதெல்லாம்!

சென்னை: தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் மதப்பிரச்சனையை ஏற்படுத்தும் காட்சிகள் உள்ளன; வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதப்பிரச்சனையை ஏற்படுத்தும் வசனம் ஜனநாயகன் படத்தில் உள்ளது. ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும், தணிக்கை வாரியத்துக்கு போதுமான கால அவகாசம் வழங்கவில்லை என்பதால் மீண்டும் தனி நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜனநாயகனுக்கு யுஏ சான்றிதழ் கொடுக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து என்று அதிரடி தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

Netizens trolls Jana Nayagan team after High Court s Judgement

தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்துவிட்டு மீண்டும் தனி நீதிபதி உரிய விசாரணையை நடத்த வேண்டும் என 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ள நிலையில், நேற்று இரவு முதல் பிப்ரவரி 6 படம் வெளியாகும் என விஜய் தரப்பினர் சோஷியல் மீடியாவில் உருட்டியதெல்லாம் வீணாப்போச்சே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

எல்லா கோட்டையும் அழிங்க: மறுபடியும் முதல்ல இருந்தா என ஷாக் ஆகும் அளவுக்கு ஜனநாயகன் வழக்கு பந்தாடப்பட்டு வருகிறது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர். வெண்ணிலா கபடி குழு படத்தில் வருவது போல எல்லா கோட்டையும் அழிங்க முதல்ல இருந்து கேஸ் போடுங்க என நீதிமன்றம் ஜனநாயகன் வழக்கில் பேஸ்கெட் பால் விளையாடி விட்டது என்றும் கலாய்த்து வருகின்றனர்.

Netizens trolls Jana Nayagan team after High Court s Judgement

உருட்டுனது எல்லாம் போச்சே: பிப்ரவரி 6ம் தேதி ஜனநாயகன் படம் கன்ஃபார்மாக ரிலீஸ் ஆகிவிடும். ஓவர்சீஸ் தியேட்டர் டிஸ்ட்ரிபியூட்டர்கள் எல்லாம் சொல்லி விட்டார்கள். உயர்நீதிமன்றத்தில் விஜய்க்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என உருட்டுனது எல்லாம் வீணப்போச்சே பாஸ் என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

பருத்தி மூட்டை குடோன்லயே: இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்றும் இப்போதைக்கு ஜனநாயகன் படம் தியேட்டரில் வெளியாக வாய்ப்பே இல்லை. சட்டுபுட்டுனு ஓடிடி மற்றும் ஓவர்சீஸில் ரிலீஸ் செய்தே வசூலை அள்ளி விடலாம் என விஜய் ரசிகர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பராசக்தி படக்குழு போல கடைசி வரை கம்முன்னு இருந்தா இந்நேரம் படம் ஜம்முன்னு ரிலீஸ் ஆகியிருக்கும் என்றும் அட்வைஸ் செய்து வருகின்றனர். ஜனநாயகன் படக்குழு இதற்கு மேலும், வழக்கை தொடரப் போகிறதா? அல்லது ரிவைசிங் கமிட்டிக்கு செல்லப் போகிறதா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X