Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
என்னவோ நாங்கஓட்டு போடறத வச்சு தான் எல்லாம் பண்ற மாதிரி சீன் போடறீங்க.கமலால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் கமல் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கே லந்து கொடுத்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பேசிய கமல், இந்த வீட்டின் உள்ளே போட்டியாளர்கள் விளையாட்டுக்களை நேர்மையாக விளையாடுகிறார்களா என்பதை உங்கள் பிரதிநிதியாக நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
நேர்மையாக விளையாடுகிறார்களா.. உங்கள் தேர்வின் சாயல் தெரிய ஆரம்பித்துவிட்டது.. அதிரடி காட்டும் கமல்!
மேலும் உங்கள் தேர்வின் சாயல்கள் இந்த வாரம் முதலே தெரிய ஆரம்பித்துவிட்டதாக எனக்கு தோன்றுகிறது. உங்கள் ஓட்டு இந்த வீட்டை எப்படி மாற்றப் போகிறது என்பதை பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அன்ஃபிட்ட முடிச்சு விடுங்கய்யா
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் இந்த வாரம் ரியோவை பாராட்டுங்கள்! அப்படியே ஆரி அவர் யோசிக்கிறது சரி. அதுலையே நிக்க சொல்லுங்க கோவத்தில் ரூல்ஸ விடக்கூடாது! முடிஞ்சா அந்த அன்ஃபிட்ட முடிச்சுவிடுங்கய்யா! இவங்க தொல்லை தாங்கல! என்று கூறியுள்ளார்.
பெரிய குற்றவாளியாம்
இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஒரு வேண்டுகோள் இனி எல்லாரையும் நீங்களே நேரடியாக நாமினேஷன் செய்யுங்கள் வொர்ஸ்ட் பெஸ்ட் பர்ஃபாமராக தேர்ந்தெடுங்கள்! உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் உள்ளே இருப்பார்கள். மற்ற போட்டியாளர்கள் குவாளிஃபை பண்ண தகுதியில்லையாம்! அந்த வேலைய பண்ணா பெரிய குற்றவாளியாம்! என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
ஆண்டவரை நம்பலாம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனாவை வெளியே அனுப்பிட்டா இனி ஆண்டவரை நம்பலாம்! எல்லை மீறி புறம் பேசும் புண்ணாக்குகளுக்கு வாயில் புளியை கரைச்சு ஊற்றுங்க ஆண்டவரே! என கூறியுள்ளார்.
வேலையே இல்லையே
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரிங்க போறீங்க.... ஆமா இந்த வாட்டி தான் உங்களுக்கு வேலையே இல்லை.... எதுக்கு வருகிறார்! என கலாய்த்துள்ளார்.
விஷ கொடுக்குகள்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரியை ஒன்றும் செய்யமுடியாது இந்த இரண்டு விஷ கொடுக்குகலால்! என அனிதா மற்றும் ரம்யாவின் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
நியாயமா செய்யுங்க..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீங்க பார்த்துக் கொண்டிருக்கிறேன்னு சொன்னிங்க.. அதுவே போதும் தலைவா.. ம்ம் நியாயமா செய்யுங்க.. என கூறியுள்ளார்.
அர்ச்சனாவை அனுப்புங்க போதும்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவரே எங்க ஓட்டு எல்லாமே ஆரிக்கு மட்டும் தான் அது உங்களுக்கே தெரியும் மொதல்ல இந்த அர்ச்சனாவை வெளிய அனுப்புங்க அது போதும் என கூறியுள்ளார்.
சீன் போடுறீங்க..
கமலின் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னவோ நாங்க ஓட்டு போடறத வச்சு தான் எல்லாம் பண்ற மாதிரி சீன் போடுறீங்க என கமலையே விளாசியிருக்கிறார்.