யார் பார்த்த வேலைடா இது? சிரிப்பை அடக்க முடியல.. இது என்னடா சுந்தர் சிக்கு வந்த சோதனை!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 172 வது படமான ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்நிலையில் நேற்று அதாவது, நவம்பர் 5ஆம் தேதி ரஜினிகாந்த்தின் 173 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாகவும் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அவர்கள் காம்பினேஷன் குறித்து சில நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.
தலைவர் 173 என்ற டைட்டிலுடன் வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்கள் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான அலாவுதீன் அற்புத விளக்கு படத்தில் தான் இணைந்து நடித்திருந்தார்கள். அதற்கு பின்னர் இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை. கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் இணைந்துள்ள படம் தான் தலைவர் 173. இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாகவும், கமல்ஹாசன் தயாரிப்பாளராகவும் கமிட் ஆகியுள்ளார்கள். படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார்.

சுந்தர் சி பக்காவான கமர்ஷியல் இயக்குநர் என்பதால், இந்த படத்தின் மீது பெரும் நம்பிக்கை ரசிகர்களுக்கு உள்ளது என்றாலும், நெட்டிசன்கள் பலரும் சுந்தர் சியை ட்ரோல் செய்தும் வருகிறார்கள். அதாவது, சுந்தர் சிக்கு எந்த படம் கை கொடுக்கிறதோ இல்லையோ அவரது, ஆவ்னி சினிமாஸ் மூலம் அரண்மனை என்ற தனது டிரேட்மார்க் படத்தை கொடுத்து அதில் ஹிட்டும் கொடுத்து வருகிறார்.
ட்ரோல்: இப்படி இருக்கையில் இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார், அந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார் என்றதும் இணையவாசிகள் பலரும் இந்த காம்பினேஷனை ட்ரோல் செய்யத் தொடங்கி விட்டார்கள். அதில், என்னவென்றால் சுந்தர் சி-யின் படமான அரண்மனை படத்தின் 5வது பாகத்தை தான் சுந்தர் சி, ரஜினியை வைத்து இயக்கப் போகிறார் என்றும், படத்தில் பேயாக நடிகர் கமல்ஹாசன் தான் நடிக்கவுள்ளார் என்றும் மீம் உருவாக்கி உள்ளார்கள். இந்த மீம் இணையவாசிகள் மத்தியில் நல்ல கவனத்தை ஈர்த்துள்ளது.

கமல் நெகிழ்ச்சி: ரஜினியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது குறித்து கமல்ஹாசன் மிகவும் நெகிழ்ச்சியாக கைப்பட எழுதி பதிவிட்டிருந்தார். அதில், " அன்புடை ரஜினி, காற்றாய் அலைந்த நம்மை இறுக்கி கிறுக்கி தனதாக்கியது சிகரத்தின் இரு பனிப்பாறைகள் உருகி வழிந்து இரு சிறு நதிகளானோம். மீண்டும் நாம் காற்றாய் மழையாய் மாறுவோம். நம் அன்புடை நெஞ்சார நம்மைக்காத்த செம்புலம் நனைக்க, நாமும் பொழிவோம் மகிழ்வோம். வாழ்க நாம் பிறந்த கலை மண்" என்று பதிவிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











