எப்படி தட்டி கேட்பீங்க மயில் இறகாலா? காலரை பிடிச்சி வெளியே தூக்கி எறிங்க.. காண்டில் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் நடிகர் கமல்ஹாசனை விளாசியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பேசிய கமல் குரலை உயர்த்தி பேசிட்ட நியாயமாகிடாது. அது முரட்டுத்தனம் என்று பாலாஜியை குத்தும் வகையில் பேசியுள்ளார்.
மேலும் தப்பு மேல தப்பு செஞ்சுக்கிட்டே இருக்குறவங்களை என்ன பண்றது? என்று கேட்டுள்ள கமல், தட்டிக் கேட்போம் என்று முடித்துள்ளார். கமலின் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் புரமோவெல்லாம் நல்லாதான் இருக்கு புரோகிராம்தான் மொக்கையா இருக்கு என கூறி வருகின்றனர்.
புரமோ மட்டும்தான்..
இவர் முகத்தில் அந்த கால சிவாஜி சாரையே பார்த்தா மாதிரி இருக்கு..! என்ன ஒன்னு புரமோ மட்டும் தான் அப்படி இருக்கு..! என்று கூறியுள்ளார்.
ஆரிக்கு க்ளாப்ஸ்
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஏன் பாலா, இருக்குற பத்து நாள்ல, அர்ஜுன் ரெட்டியா மாற நினைக்கிறீங்க.. நீங்கள் பேசுறது அப் நார்மல்... முரட்டு தனம்... எப்பயும் போல இந்த எபிசோடு ஆரிக்குக்கு க்ளாப்ஸ்.. பாலா உங்களுக்கு ஸ்லாப் தான்... என பதிவிட்டுள்ளார்.
எச்சரியுங்கள் கமல்
கமல் பேசும் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், புரமோலாம் நல்லா தான் இருக்கு.. சார் இது ஒரு அன்பான வேண்டுகோள்.. அசிங்கம்புடிச்ச அந்த பாலாஜிக்கு நீங்கள் எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வெளியே தூக்கி எறிங்க..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆமா எப்படி தட்டி கேட்பீங்க ஆண்டவரே மயில் இறகாலா? அவனை சட்டை காலரை பிடிச்சி வெளியே தூக்கி எறிங்க!.. சோம்பேரி சைக்கோ பாலா! என்று பதிவிட்டுள்ளார்.
நியூ இயர கெடுத்துட்டீங்க..
முதல்ல எங்க நியூ இயர கெடுத்ததுக்கு உங்க பிக்பாஸ் டீம்..
எங்களுடைய புத்தாண்டை கெடுத்ததற்கு நீங்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லாவற்றையும் எடிட் செய்துவிட்டு எல்லாமே வயலென்ட் புரமோவை போஸ்ட் செய்தீர்கள் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
சைக்காலஜிஸ்ட்ட அனுப்புங்க!
கமல் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், தட்டிக்கேட்கிறீங்களோ இல்லையோ? உள்ள இரண்டு சைக்காலஜிஸ்ட்ட உள்ளே அனுப்புங்க! எல்லாருக்கும் ட்ரீட்மென்ட் வேணும் உள்ள! என்று பதிவிட்டுள்ளார்.
புரோகிராமில் சொங்கி
புரமோவில் கமல் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஆமா புரோமோவில் பொங்கிவிட்டு. புரோகிராமில் சொங்கி பாலாவுக்கு சொம்பு அடிப்பீங்களா? ஆண்டவரே! என்று பதிவிட்டுள்ளார்.
தூக்கி வெளியே போடுங்க..
அந்த விஷ பூச்சியையும் தூக்கி வெளியே போடுங்க!.. ஆண்டவரே! என்று ரம்யா பாண்டியனையும் விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.
கவின் ஓவியா மாதிரி..
புரமோவில் கமல் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், தட்டி தழுவி கொடுங்க.. அவன் திரும்ப திங்கள் கிழமைல இருந்து சண்டை ஆரம்பிச்சுடுவான்.. கோவபட்டு தாங்க முடியாம கவின், ஓவியா மாதிரி ஆரியும் வெளிய போகனும்
நீங்க பாலாக்கு டைட்டீல் கொடுக்கணும் சூப்பர்! என்று கூறியுள்ளார்.
எப்படி நியாயத்த நிலைநாட்டி..
கமல் பேசும் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், புரமோ ஆண்டவரே உங்கள் முதல் புரோமோவே சரியான டைம்க்கு வரல!.. நீங்க லேட்டா வந்துயிருக்கீங்க!.. எப்படி நியாயத்தை நிலைநாட்ட போறீங்களோ தெரியல ஆண்டவரே! என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
செரட் கார்டு கொடுங்க..
புரமோ எல்லாம் நல்லா இருக்கு சார். அந்த பாலாவை வெளியே அனுப்பினீங்கிளா ரெட் கார்டு கொடுத்து? நீங்க பேசுறத பார்த்தா அனுப்பலை போலையே என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
ஆரிக்கு சேதம் இருக்கக்கூடாது
கமலின் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் சரவணன் மஹத் கூட இந்த அளவுக்கு பண்ணல.. உடனே வெளிய அனுப்பிட்டு.. இப்ப இவன் பண்ணாத சேட்டை இல்ல.. நீங்க அவனை தட்டி கொடுத்து உள்ள வச்சிக்கங்க!!
தகுதி இல்லாத ஒருவருக்கே நீங்க பரிசு கொடுங்க..
ஆரிய எந்த வித சேதமும் இல்லாமல் வெளியில் அனுப்பிடுங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
வாய் பொத்திக்கிட்டு..
சார் நீங்க தட்டி கேட்கவில்லை என்றால்.. மக்களாகிய நாங்க கேட்போம் கமல் சார்.. பார்த்து பேசுங்க.. உங்க கட்சிகாரன் நாங்க இல்லை.. மக்கள் நாங்க.. நீங்க பேசுறது கைதட்டி வாய் பொத்தி கேட்டுக்கிட்டு இருக்க மாட்டோம்.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
மாட்டிக்க போறீங்க..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அதெல்லாம் சரி ஆண்டவரே.. இரவு பகல் பாக்காம சரியா தூங்காம மக்கள் சந்திப்பெல்லாம் முடிச்சிட்டு சனிக்கிழமை ரொம்ப லேட்டா வந்து ஆரம்பிக்கறிங்க. ஒன்னும் பாத்திருக்க மாட்டிங்க. ஸ்க்ரிப்ட்டை எதுக்கும் நல்லா மனப்பாடம் பண்ணிக்கோங்க.
ஆள மாத்தி கேள்வி கேட்டு மாட்டிக்க போறீங்க என்று கமலையே கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











