Kamal: ஏமிரா இதி! இந்தியன் 2, தக் லைஃப் படங்கள் மூலம் கமல்ஹாசன் செய்யும் மறைமுக வேலை.. ஷாக் கொடுத்த ரசிகர்!
சென்னை: கமல்ஹாசனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொஞ்சம் நேரம் சரியில்லை போல. இவர் நடித்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் என இரண்டு படங்களுமே படுதோல்வி படங்களாக மாறியுள்ளது. இதில் தக் லைஃப் படம் அவரது சொந்த தயாரிப்பில் உருவான படம். கமல்ஹாசன் எப்போதுமே தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கும் படத்தை தரமானதாக கொடுப்பார். அப்படித்தான் கடைசியாக அவரது தயாரிப்பில் வந்த விக்ரம் மற்றும் அமரன் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தது.
ஆனால் தக் லைஃப் படம் மிகப்பெரிய தோல்வி படமாக மாறியுள்ளது. இந்த படத்தின் தோல்விக்கு பல காரணங்களை இணையவாசிகளும் விமர்சகர்களும் அடுக்கி வருகிறார்கள். குறிப்பாக, படத்தின் திரைக்கதை மிகவும் சொதப்பலான ஒன்று என விமர்சித்து வருகிறார்கள். படத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள், ஆனால் படத்தில் படமாக, ரசிகர்கள் மனதில் நிலைப்பதை போல ஒரு காட்சி கூட இல்லை என விமர்சித்து வருகிறார்கள். 38 ஆண்டுகளுக்கு பின்னர் மணிரத்னத்துடன் கமல்ஹாசன் இணைந்துள்ளார் என்று பலரும் ஆவலுடன் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் படம் படு சொதப்பல்.
இதற்கு முன்னர் ஷங்கருடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்தார் கமல். இந்த கூட்டணி கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த கூட்டணி இணைந்தது. அதுவும் மிகப்பெரிய வெற்றிப் படமான இந்தியன் படத்தின் சீக்வல் இந்தியன் 2 என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் படம் காட்டு மொக்கைப் படத்தின் பட்டியலில் இணைந்தது. நாடு நாடாக கமல்ஹாசன் செய்த புரோமோஷன்கள் கொஞ்சம் கூட ஒர்க்-அவுட் ஆகவில்லை. இந்நிலையில் கமல்ஹாசனின் கடைசி இரண்டு படங்கள் குறித்து ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

களை எடுக்கிறேன்: அதாவது, " நான் வேணும்னே குப்ப படம் குடுக்கல, களை எடுத்துட்டு இருக்கேன்.. Legends னு ஊர ஏமாத்தகிட்டு.. உழைக்காமலே வேலை செய்ற இவனுங்கள மாறி ஆளுங்கள Tamil cinema விட்டே துரத்தி அடிக்கிற வேலைய தான் இப்போ நான் பாத்துட்டு இருக்கேன்... அது இனியும் தொடரும்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு இந்தியன் படத்தில் இருந்து ஒரு மீம் டெம்ப்ளேட்டையும் பகிர்ந்துள்ளார். அதேபோல் மற்றொரு ரசிகர் தக் லைஃப் படத்தின் டிரைலர் பார்த்ததும் அவரும் அவரது நண்பரும் உரையாடிக் கொண்டது குறித்து பகிர்ந்துள்ளார்.
டிரைலர் டீ - கோடிங்: அதில், " Thug Life Trailer வந்த நேரம் நானும் ப்ரண்ட் ஒருத்தனும் பேசிக்கிட்டோம். 'இனிமே நான் தான் ரங்கராய சக்திவேல்' ன்னு சிம்பு சொல்லுறத வச்சி இது ஒரு Kingdom க்கான போராட்டம். செம்மயா இருக்கும். அப்பன் மகனுக்கான சண்டை. தீனா டைப் கதைதான். ஆனாலும் மணி, கமல் வேற லெவல்ல பண்ணிருப்பாங்க என நான் சொன்னேன். எனக்கும் ஒரு படி மேல போய் அந்த Friend, இல்ல இது Rebirth பத்தின ஒரு Supernatural கதையா இருக்கும்.



Click it and Unblock the Notifications











