மீண்டும் H ராஜாவை ட்ரோல் மெட்டீரியலாக்கிய அட்மின்.. கந்தன் மலை போஸ்ட்டில் இப்படி ஒரு மிஸ்டேக்!

சென்னை: தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த ஹெச். ராஜா பலராலும் நன்கு அறியப்படுகிற அரசியல்வாதி. பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி, எப்போதும் செய்திகளில் இடம் பிடிக்க கூடியவர். அதே நேரத்தில் தனது நிலத்தில் விவசாயம், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்பனவற்றிலும் அதிக கவனம் செலுத்தி வருபவர். இவர் நடித்துள்ள படம் கந்தன் மலை. இந்த படத்தின் டிரைலர் எல்லாம் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தாலும் படத்தை தியேட்டரில் வெளியாகும் என்று பார்த்தால் படத்தை படக்குழு யூடியூப் தளத்தில் வெளியிட முடிவு செய்து நாளை முதல் யூடியூபில் ரிலீஸ் செய்யவும் உள்ளது.

இப்படி இருக்கும்போது இது தொடர்பான அறிவிப்பை படக்குழுவும், படத்தின் மையக் கதாபத்திரமாக நடித்துள்ள ஹெச். ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் தேதி குறிப்பிட்டதில் மாதத்தை தவறாக குறிப்பிட்டுள்ளார். நாளை முதல் என்று குறிப்பிட்டுவிட்டு, அதாவது டிசம்பர் மாதம் 19ஆம் தேதி என்று குறிப்பிடாமல், 6வது மாதம் அதாவது ஜூன் மாதம் 19ஆம் தேதி யூடியூப் சேனலில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.

Netizens Trolls KANDHANMALAI Actor Who BJP H Raja for X Page Post About KANDHANMALAI Release Date

மிஸ்டேக்: இதில் தேதி தவறாக இருப்பதால் இணையவாசிகள் பலரும் அதைச் சுட்டிக் காட்டி வருகிறார்கள். அதேபோல் சில இணையவாசிகள் அதைக் கவனிக்காமலும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். ஹெச். ராஜா தனது எக்ஸ் பக்கத்தை அவர் நிர்வகிப்பது கிடையாது. அதை அவரது அட்மின் தான் நிர்வகித்து வருகிறார். அட்மின் தான் தவறுதலாக தேதியை அப்படிக் குறிப்பிட்டிருப்பார். அதற்காக நீங்கள் யாரும் ஹெச். ராஜாவை தவறாக நினைக்க வேண்டாம் என்றும் சிலர் பேசி வருகிறார்கள். இப்படி தப்பு தப்பா புரோமோசன் செய்தால் படத்தை பார்ப்பவர்கள் கூட பார்க்கமாட்டார்கள் என்று பேசி வருகிறார்கள்.

ட்ரோல்: இணையவாசிகள் இவ்வாறு கருத்து சொல்ல பல காரணங்களும் சம்பவங்களும் உள்ளது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுவிட்டு, அது வழக்காக மாறினால் அந்த பதிவை நான் பதிவிடவில்லை எனது அட்மின் தான் பதிவிட்டார் என்று எல்லாம் அவர் கூறிய வரலாறு உள்ளது. ஒருமுறை நீதிமன்றத்தை அவமதித்து பேசிவிட்டு, நீதிமன்றத்திற்கு சென்று மன்னிப்பு எல்லாம் கேட்டார். அவரது அட்மின் செய்த இந்த சின்ன மிஸ்டேக்கால் பலரும் அவரது கடந்த கால சம்பவங்கள் குறித்தும் பகிர்ந்து வருகிறார்கள்.

More from Filmibeat

Read more about: h raja bjp பாஜக tamil cinema
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X