என்ன கங்குவா ட்ரெய்லரில் பாகுபலி வாடை அடிக்குது?.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கிறது. படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது..
சூர்யா நடிப்பில் படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாக அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்தப் படத்துக்கு பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர்; வாடிவாசல் படத்திலும் கவனம் செலுத்தவில்லை. தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார்.

பிரமாண்ட பட்ஜெட்: இந்தப் படம் பெரும் பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் ஹை பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியடைந்ததால் இந்தப் படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று தீவிரத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார் அவர்.
வரவேற்பை பெற்ற கங்குவா: கோலிவுட்டில் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது கங்குவா. படத்திலிருந்து வெளியான க்ளிம்ப்ஸ், டீசர், ஃபர்ஸ்ட் லுக் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனைப் பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் கண்டிப்பாக கங்குவா படத்தின் வெற்றி அதன் பட்ஜெட் போலவே பிரமாண்டமாக இருக்கும் என்று கணித்திருக்கின்றனர். படத்தின் ப்ரீ பிஸ்னெஸ்ஸும் நன்றாகவே போயிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது.
வேட்டையன் VS கங்குவா: படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த நாளில்தான் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படமும் ரிலீஸாகவிருக்கிறது. ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் அந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஜினியுடன் சூர்யா தைரியமாக போட்டியிடுகிறாரே தப்பித்துவிடுவாரா என்று ரசிகர்கள் இப்போதே கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்.
வெளியான ட்ரெய்லர்: இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று சிவா பிறந்தநாளையொட்டி வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரை பார்த்த சூர்யா ரசிகர்கள் அடடா செம பிரமாண்டமா இருக்கே என்று கமெண்ட்ஸ் செய்து ட்ரெண்டாக்கிவருகின்றனர். முக்கியமாக படத்தில் விஷுவல் ட்ரீட்டுக்கு குறை இருக்காது என்று உறுதியாக சொல்கிறார்கள் அவர்கள்.
பாகுபலி வாடை: அதேசமயம் இன்னொரு தரப்பினரோ ட்ரெய்லர் நன்றாகவே இல்லை என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.முக்கியமாக கங்குவா ட்ரெய்லரை பார்க்கையில் பாகுபலி வாடைதான் அடிக்கிறது. கண்டிப்பாக அதேபோல்தான் படம் இருக்கப்போகிறதோ என்று அச்சத்துடன் பேசிவருகிறார்கள். இப்படி கங்குவா ட்ரெய்லர் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications











