இதெல்லாம் ரொம்ப ஓவர்... மாரி செல்வராஜின் பட அப்டேட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை : புதிய படம் பற்றிய அப்டேட்டிற்காக டைரக்டர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள போட்டோவை தான் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா என கேட்டு வருகின்றனர்.

டைரக்டர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடிக்கும் இந்த படத்தின் அறிவிப்பை ஸ்பெஷல் போஸ்டருடன் மார்ச் 4 ம் தேதி வெளியிடப்பட்டது. படத்தை அறிவித்த அடுத்த நாளே ஷுட்டிங்கை துவக்கி விட்டனர்.

மாமன்னனில் இணைந்த வடிவேலு

மாமன்னனில் இணைந்த வடிவேலு

சிறிய பூஜையுடன் படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் துவங்கப்பட்டு, விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் வடிவேலுவுடன் ஃபகத் ஃபாசிலும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த படத்தில் தானும் இணைந்துள்ளதை வடிவேலு, மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

முதல்கட்ட ஷுட்டிங் ஒவர்

முதல்கட்ட ஷுட்டிங் ஒவர்

மாமன்னன் படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் சேலம் ,ஏற்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று, மாமன்னன் படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் நிறைவடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவுடன் அப்டேட் வெளியிட்டார் மாரி செல்வராஜ். விரைவில் உதயநிதி இருக்கும் போஸ்டரும் வெளியிட போகிறார்களாம்.

போட்டோக்களை பகிர்ந்த மாரி செல்வராஜ்

போட்டோக்களை பகிர்ந்த மாரி செல்வராஜ்

மாமன்னன் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தான் தயாரிக்கிறது. முதல் கட்ட ஷுட்டிங் நிறைவடைந்ததை முன்னிட்டு படக்குழுவினர் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த போட்டோக்களை மாரி செல்வராஜ் மட்டுமின்றி ரெட் ஜெயின்ட் மூவிசும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

இதெல்லாம் ஓவரா இல்லையா

இதெல்லாம் ஓவரா இல்லையா

இதை பார்த்து விட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியலியா. படம் வெற்றி பெற்றால், படத்தின் ஷுட்டிங் நல்லபடியாக முடிந்தால் அந்த சந்தோஷத்தை கொண்டாட கேக் வெட்டலாம். முதல் கட்ட ஷுட்டிங் முடிந்ததற்கே இப்படியா. அப்போ படம் மொத்தமாக முடிந்தாலோ, பட ரிலீஸ், படத்தின் வெற்றிக்கு என்ன செய்வீர்கள் என கேட்டு கலாய்த்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X