மரண பங்கம்.. மீரா மிதுனை இதற்கு மேல் வச்சு செய்ய முடியாது.. நெட்டிசன்ஸ் வேற லெவல்!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுனின் கவர்ச்சி ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்து வீடியோ வெளியிட்டிருக்கின்றனர்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் மீரா மிதுன். விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் தொடங்கி பிக்பாஸ் சீசன் வரை தன்னுடன் பணியாற்றும் சக போட்டியாளர்கள் மீது தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அரசியல் ஆர்வமும் உள்ள மீரா மிதுன் அரசு மற்றும் அரசியல்வாதிகளையும் சாடி வருகிறார். அவ்வப்போது பப்பில் தனது ஆண் நண்பர்களுடன் போடும் ஆபாச ஆட்டத்தையும் வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

ஆண் நண்பருடன்
மீரா மிதுனின் ஆட்டத்தை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இளையராஜாவின் நீ பார்த்த இரவுக்கு ஓர் நன்றி என பாடலுக்கு தனது ஆண் நண்பருடன் கவர்ச்சியாக ஆடியிருக்கிறார்.

டான்ஸை ஒப்பிட்டு
அதனை பார்த்த நெட்டிசன்கள் டான்ஸ் ஆட தெரியாம ஏன் ஆடுகிறீர்கள் என கேட்டு விளாசினர். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் மீரா மிதுன் டான்ஸை ஒப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாட்டியுடன் ஒப்பிட்டு
அதில் வயசு பொண்ணுதான்.. வாழக் கண்ணுதான்.. என்ற பாடலுக்கு மூதாட்டி ஒருவர் டான்ஸ் ஆடுவதாக உள்ளது. சுடிதார், போனி டெய்ல், கை நிறைய வளையல், கழுத்தில் நெக்லஸ் என அசத்தலாய் உள்ள அந்த பாட்டி, வயசு பொண்ணுதான் பாடலுக்கு ஆடும் ஆட்டத்தை ஒப்பிட்டுள்ளனர்.
மரண கலாய்
மேலும் லவ்லி மொமென்ட் சூப்பர்.. மீரா டார்லிங் என்றும் குறிப்பிட்டு ரணகளப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே மீரா மிதுனை ஒரு பாட்டி என்று விமர்சித்து வரும் நெட்டிசன்ஸ் இந்த வீடியோவை வைத்து மீரா மிதுனை மரண கலாய் கலாய்த்திருக்கின்றனர்


Click it and Unblock the Notifications











