ஒரு படம் ரிலீஸ் ஆகல.. அனிருத்துக்கு வில்லனா சாய் அபயங்கர்? மீம்ஸ் போட்டு கலாய்க்கும் இணையவாசிகள்!
சென்னை: நடிகர்கள், நடிகைகளுக்குள் எந்த அளவுக்கு தொழிலில் போட்டி உள்ளதோ, இல்லையோ, அவர்களது ரசிகர்கள் மத்தியில் போட்டியும் சண்டையும் எப்போதும் இருந்து வந்து கொண்டே உள்ளது. இப்படி இருக்கும்போது இசையமைப்பாளர்களுக்கு இடையிலும் போட்டி இல்லை என்றாலும், ரசிகர்கள் அவர்களுக்கு இடையில் போட்டிகளையும் பொறாமைகளையும் உருவாக்கிவிடுவார்கள் போலத் தெரிகிறது.
தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் அடுத்தடுத்து புதுப்புதுப் படங்களில் கமிட் ஆகி வருபவர் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இளம் இசையப்பாளரான சாய் அபயங்கர் முதன் முதலில் கமிட் ஆன படம் என்றால் அது சூர்யாவின் 45 வது படமான கருப்பு படத்தில் தான். அதன் பின்னர் சாய் அபயங்கர் தமிழ், மலையாளம் மற்றும் பான் இந்தியா என அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதுவும் சாய் அபயங்கர் கமிட் ஆகும் படங்கள் எல்லாமே பெரிய பெரிய நடிகர்கள் நடிக்கும், பெரிய பட்ஜெட் படங்கள் தான்.
சாய் அபயங்கர் இசையில் இதுவரை சில ஆல்பம் பாடல்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. இதுவரை அவரது இசையில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. ஏற்கனவே வெளியான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அப்படி இருக்கும்போது படத்திற்கும் நல்லபடியாக இசையமைப்பார் என நம்பி, சூர்யாவின் கருப்பு படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.
ஒரு படம்: ஆனால் இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை, படத்தின் பின்னணி இசைகளுக்கு எவ்வாறு இசை அமைப்பார் என்று ரசிகர்களுக்கு தெரியாத நிலையில், சாய் அபயங்கருக்கு மட்டும் எப்படி இவ்வளவு படங்களில் இசை அமைக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது என்ற கேள்வியை பலரும் எழுப்பி வந்த நிலையில், இணையவாசிகள் சாய் அபயங்கரை மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அனிருத்துக்கு வில்லன்: நானும் ரவுடிதான் படத்தில் வரும் காட்சி ஒன்றை குறிப்பிட்டு, அதில் பார்த்திபன், மன்சூர் அலிகானைப் பார்த்து பேசும் வசனத்தை சாய் அபயங்கர் அனிருத்தை பார்த்து பேசுவது போல மீம் வெளியிட்டுள்ளார்கள். அதில்," நீ வேனா அப்போது இருந்து வில்லனாக இருக்கலாம். ஆனால் இப்போது இங்கு நான் தான் வில்லன்" என்பதை பகிர்ந்து வருகிறார்கள். மற்றொரு மீமில், சாய் அபயங்கர் இசையமைக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே தனது கடைசி படத்தை இயக்க க்வென்டின் டரான்டினோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என குறிப்பிட்டு அவரைக் கலாய்த்து வருகிறார்கள்.
மிரட்டி வாய்ப்பா?: இன்னொரு மீமில், " Sam C.S, D. Imman, Harris Jayaraj, இன்னும் நிறைய திறமையான ஆட்கள் செரியா வாய்ப்பு இல்லாம வெளிய இருக்காங்கடா, எப்பிடிடா ஓரு படம் கூட வராம இவ்ளோ Line-ups? உங்களோட ஏதாவது முக்கியமான வீடியோவை ஏதாச்சும் எடுத்துவச்சு உங்கள Blackmail பன்றானா இவன்????" எனவும் கலாய்த்து வருகிறர்கள். இது தொடர்பான மீம்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களும் அதற்கு ஆர்வமாக கமெண்ட்களை போட்டு நிரப்பி வருகிறார்கள். எது எப்படியோ இந்த மீம்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் படியான இசையக் கொடுத்துவிட்டால் இப்போது கலாய்த்தவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள்.


Click it and Unblock the Notifications











