அடுத்து தலைவர் 169 நினைக்கும் போது தான்.. இயக்குநர் நெல்சனை பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: அஜித்தின் வலிமையை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கும் கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
Recommended Video
டாக்டர் படத்தில் நெல்சனை கொண்டாடிய நெட்டிசன்கள் பீஸ்ட் படத்தில் கழுவி ஊற்றத் தொடங்கி உள்ளனர்.
ஒன் மேன் ஆர்மியாக படத்தை விஜய் மட்டுமே தாங்கி வரும் நிலையில், தலைவர் 169 படத்தை நெல்சன் எப்படி சிதைக்கப் போகிறாரோ என மீம்கள் பறந்து வருகின்றன.

சொதப்பிய நெல்சன்
இயக்குநர் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களில் பண்ண அதே மேஜிக்கை கொஞ்சம் கூடுதல் ஆக்ஷன் உடன் கொடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், படத்தில் புதிய கதை, சுவாரஸ்யம், ட்விஸ்ட் என எந்தவொரு திரைக்கதையும் இல்லாத நிலையில், நெட்டிசன்கள் நெல்சனை ட்ரோல் செய்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும்
பீஸ்ட் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்து குவிகின்றன. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கும் என விமர்சனங்கள் வருவதால், பொது மக்களை கவரும் வகையில் படம் ஏன் உருவாகவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் விஜய் உடல் பொருள் ஆவி என மொத்தத்தையும் கொடுத்து ஸ்டண்ட் பண்ணியும் எல்லாமே வேஸ்ட் ஆகி விட்டதே என புலம்பி வருகின்றனர்.

தலைவர் 169
பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தை இயக்கப் போகிறார். அந்த படத்திற்கும் அனிருத் தான் இசை. பீஸ்ட் படத்தை பார்த்து ரொம்பவே பயந்து போன ரஜினி ரசிகர்கள் தலைவர் 169 படம் எப்படி எடுக்கப் போகிறாரோ நெல்சன் என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தலைவர் 169 நினைச்சாதான்
அனைவரின் பெரிய குறையே அத்தனை காமெடி நடிகர்கள் இருந்தும் யாருக்கும் ஸ்கோப் இல்லையே என்பது தான். விவேக் சார் இல்லாத நிலையில், செல் முருகனை அட்மாஸ்பியர் போல வீணடித்து விட்டார் நெல்சன் என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்நிலையில், நெல்சனின் அடுத்த சம்பவம் தலைவர் 169 படத்தை நினைச்சாதான் என மீம்கள் பறக்கின்றன.

பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்
மகான் படத்தில் விக்ரம் குடித்து விட்டு வரும் காட்சியின் போது சிம்ரன் அழுது புலம்பும் காட்சி மீமை போட்டு நெல்சன், ரஜினிகாந்த், அனிருத் என குறிப்பிட்டு நெட்டிசன்கள் பங்கம் பண்ணி வருகின்றனர். டாக்டர் படம் ஹிட் ஆன நிலையில், பீஸ்ட் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போது தலைவர் 169க்கு நெல்சன் வேண்டவே வேண்டாம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











