ஆண்டவருக்கே ஐஸ்.. அடுத்த சீசனுக்கு அடிபோடுறீங்களா.. யூடியூப் விமர்சகரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் முதல் முறையாக யூடியூப் விமர்சகரான சினிமா பையன் அபிஷேக் ராஜா கலந்து கொண்டுள்ளார்.
இரண்டாவது வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட அவர் மீண்டும் தற்போது வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், அடுத்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மற்றொரு பிரபல யூடியூப் விமர்சகர் அடிபோடுவதாக நெட்டிசன்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

யூடியூப் விமர்சகர்
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஏகப்பட்ட துறைகளை சார்ந்த பிரபலங்களை போட்டியாளர்களாக மாற்றி உள்ளனர். யூடியூப் விமர்சகராக கலக்கிக் கொண்டிருந்த சினிமா பையன் அபிஷேக் ராஜா இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கன்டென்ட் கிங் எனும் பெயரை எடுத்துள்ளார். ஏற்கனவே நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இன்னொரு விமர்சகர்
இந்நிலையில், தொடர்ந்து தனது நண்பரும் சக யூடியூப் விமர்சகருமான அபிஷேக் ராஜா பற்றி ட்வீட் போட்டு வரும் இன்னொரு யூடியூப் விமர்சகராஅன பிரசாந்த் ரங்கசாமி தற்போது போட்டுள்ள ட்வீட் அடுத்த சீசனுக்கு இவர் முயற்சி செய்கிறாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.

ஆண்டவருக்கே ஐஸ்
பாண்டா என செல்லமாக அழைக்கப்படும் பிரசாந்த் ரங்கசாமி அடுத்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்போதே சீட் போடுகிறாரா என்கிற கேள்வி எழ காரணமே அவர் தற்போது பதிவிட்டுள்ள ட்வீட் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் செம யங்காக எனர்ஜெட்டிக்காக உலகநாயகன் டிசர்ட் அணிந்து வரும் நிலையில், அந்த புகைப்படத்தை ஷேர் செய்து உங்களுக்கு வயசே ஆகாதா? சார் என ஐஸ் வைக்கும் தொனியில் அவர் ட்வீட் போட்டுள்ளார்.

அடிபோடுறாரு
உங்களுக்கு மனசாட்சியே இல்லையா என்றும் ஐஸ் வைக்கிறதுக்கும் ஒரு அளவு இல்லையா என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. சில பிக் பாஸ் ரசிகர்கள் அடுத்த சீசனுக்கு நல்லா அடிபோடுறாரு பாண்டா என யூடியூப் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமியை கலாய்த்து வருகின்றனர்.

சந்தானம் படத்தில்
அபிஷேக் ராஜாவை போலவே பிரசாந்த் ரங்கசாமியும் சினிமாவில் அவ்வப்போது தலை காட்டத் தொடங்கி உள்ளார். சமீபத்தில் வெளியான நடிகர் சந்தானத்தின் டைம் மெஷின் காமெடி படமான டிக்கிலோனாவில் நடிகை ஷிரின் காஞ்ச்வாலாவின் பாய் பெஸ்ட்டியாக நடித்து அசத்தி இருப்பார் பிரசாந்த் ரங்கசாமி.


Click it and Unblock the Notifications











