நானும் ஸ்ட்ராங் பிளேயர் தான் நம்புங்க சார்.. பிரியங்காவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: எப்போ பிக் பாஸ் வீட்டுக்குள் கால் எடுத்து வைத்தேனோ அப்பவே விஜய் டிவியில் எனக்கு வேலை இருக்காதுன்னு அப்போ பிரியங்கா சொன்னது புரியல.. இப்போ புரியுது என ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சியின் 3வது புரமோவில் நான் ஸ்ட்ராங் பிளேயர் சார் என பிரியங்கா சொல்ல அதை மக்கள் சொல்லணும் என ஒரே போடாக போட்டு பிரியங்காவை போல்ட் அவுட் செய்து விட்டார் கமல்.
பிரியங்காவையே ஏன் தொடர்ந்து கமல் டார்கெட் செய்ட்கிறார் என்று பிரியங்கா ரசிகர்களும் பிக் பாஸ் ஹோஸ்ட்டான கமலை திட்டி வருகின்றனர்.

ஒரிஜினல் கேரக்டர்
பிரியங்காவுக்கு அபிஷேக் குழி பறிக்கிறான் என அமீர் ஜால்ரா அடித்ததை பார்த்த ரசிகர்கள். தவறு.. அபிஷேக்கால் தான் பிரியங்காவின் ஒரிஜினல் கேரக்டர் வெளியே வந்தது என முகத்தில் சாணி அடிக்கும் மீம்களை போட்டு விளாசி வருகின்றனர்.

நினைப்பு தான் பொழப்ப கெடுக்குதாம்
பிரியங்காவிற்கு நினைப்பு தான் பொழப்ப கெடுக்குதாம் என அவர் தன்னை ஸ்ட்ராங் பிளேயர் என சொல்லி பல்பு வாங்கிய காட்சிகளை பார்த்து ஏகப்பட்ட நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கத்தி கத்தி அதிகம் பேசுவதால் நிஜமாவே பிரியங்கா ஸ்ட்ராங்கான பிளேயர் தான் என்றும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நானும் ஸ்ட்ராங் பிளேயர் தான்
"நானும் ஸ்டார்ங் பிளேர்தான் சார்!. நம்புங்க சார்!.. #பிரியங்கா" என நானும் ரவுடி தான் வடிவேலு காமெடி மீமை போட்டு விஜய் டிவியின் செல்லப் பிள்ளையான ஜீலி பிரியங்காவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். பேசாம பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிரியங்கா போகாமலே இருந்திருக்கலாம் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

நாக்க மூக்கா லேடி
இன்னைக்கு பிக் பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியின் ஹைலைட்டே பிரியங்கா மற்றும் இந்த நாக்க மூக்கா லேடி தான் என நாக்கை கடித்து பிரியங்காவும் அபிஷேக்கும் கமல் முன்னாடி திட்டு வாங்கும் காட்சியை ரசிக்கும் பெண்ணின் ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்துப் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











