பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு.. இந்த சீசன் அர்ச்சனா நீங்க தான்.. மாட்டிக்கிட்டாங்க பிரியங்கா!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் பிரியங்காவை அர்ச்சனா என்றே குறிப்பிட ஆரம்பித்து விட்டனர்.
Recommended Video
கடந்த சீசனில் அர்ச்சனா எப்படி மற்ற போட்டியாளர்களை அன்பு கேங்கில் ஒன்றாக இணைத்தாரோ அதே போல இந்த சீசனில் பிரியங்கா மற்றவர்களை டாமினேட் செய்ய தொடங்கி விட்டார் என்று ஏகப்பட்ட ரசிகர்கள் மீம்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் வார்னிங் பண்ண நிலையில், அதற்கும் அதிக ஆட்டிட்யூட் காட்டி பிரியங்கா ஓகே பாஸு என பேசியதையும் வச்சு ஓட்டி வருகின்றனர்.

சீக்கிரம் முட்டிக்கும்
"#Priyanka பிக் பாஸ என்னனு சொன்னா எனக்கு தான் சரியா கேக்கலையா என்ன? ஆனா ஒன்னு #rajujeyamohan வச்சி செய்யுறா.. கூடிய சீகிரம் #Priyanka #rajujeyamohan இல்லனா நம்ம தலைவர் #Abishek இவங்களுக்குள்ள கண்டிப்பா முட்டிக்கும்" என நெட்டிசன்கள் இப்பவே ஜோசியம் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

பிக் பாஸ மதிப்பதில்லை
"பிக் பாஸ்: பிரியங்கா உங்க மைக்க சரியா மாட்டுங்க.. பிரியங்கா: ஹா.. சரி ஓகே பாஸு" என்ன ரெண்டு நாளா பிரியங்கா பிக் பாஸை சரியா மதிக்காம அசால்ட்டா டீல் பண்றாங்களே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பைத்தியக்காரனாவே
எந்த புரமோவை எடுத்தாலும் அதற்கு கீழே அபிஷேக் ராஜாவை பங்கம் செய்யாமல் நெட்டிசன்கள் கடந்த செல்வதே இல்லை. அபிஷேக் ராஜாவை பிரியங்கா லூசு என சொன்ன காட்சியை போட்டு.. இன்னும் நீ என்ன பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கியா என்றும் மீம் போட்டு கலாய்த்துள்ளனர்.

ஜோக் காட்டுறியா
என்ன பிரியங்கா பிக் பாஸ் வீட்டுல ஜோக் காட்டுறியா என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து கொண்டு பிக் பாஸுக்கு மரியாதை கொடுக்காமல் பிரியங்கா நடந்து கொள்வது சரியில்லை என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

புரமோ ஃபுல்லா
விஜய் டிவி புராடக்ட் என்பதால் பிரியங்காவையே எல்லா புரமோவிலும் காட்டுறாங்க என்கிற குற்றச்சாட்டுகளும் எழத் தொடங்கி உள்ளன. மேலும், பிரியங்கா புரமோ ஃபுல்லா வந்துட்டாங்க.. ஆனால், சிரிப்பு தான் வரல என வேற லெவலில் நக்கலடித்து ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

அர்ச்சனா 2.0
பத்து பொருத்தமும் பக்காவா இருக்குது.. ஒருவேளை அர்ச்சனா 2.0வா இருக்குமோ பிரியங்கா என கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட தொகுப்பாளினி அர்ச்சனாவுடன் பிரியங்காவை கம்பேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications