புஷ்பா 3ல அப்போ வாயையும் கட்டிட்டா?.. அல்லு அர்ஜுன் எதுல சண்டை போடுவாரு?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தியேட்டருக்கு ஹைப்பை அதிகரித்து வரவைத்துவிட்டார் அல்லு அர்ஜுன். ஆனால், அந்த படத்தை பார்த்த பலருக்கும் முதல் பாகம் அளவுக்கு படம் திருப்திகரமாகவே இல்லை. புஷ்பா 2 படத்தை இயக்குநர் சுகுமார் ரொம்பவே சொதப்பி விட்டார் என்றும் இந்த படம் 1000 கோடி வசூல் எல்லாம் அள்ளாது என்றும் கலாய்த்து வருகின்றனர்.
ஒரு வாரம் ஓடினாலே பெரிய வசூலை அள்ளிவிட வேண்டும் என்பதற்காகவே டிசம்பர் 6ம் தேதி ரிலீஸையே ஒரு நாள் முன்பாக மாற்றி டிசம்பர் 5ம் தேதியே புஷ்பா 2 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு வெளியான விஜய்யின் கோட் திரைப்படம், மகேஷ் பாபுவின் குண்டூர் காரம், ஜூனியர் என்டிஆரின் தேவரா உள்ளிட்ட படங்கள் ஸ்டார்டம் காரணமாகவே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தின. ஆனால், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் விதமாக அந்த படங்கள் அமையவில்லை. அதே நிலைதான் புஷ்பா 2 படத்துக்கும் ஏற்பட்டுள்ளது. அதுவும் கடைசி கிளைமேக்ஸ் சண்டையை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.
மிரட்டிய புஷ்பா: பாலிவுட்டில் புஷ்பா திரைப்படம் முதல் நாளில் வெறும் 4 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் 72 கோடி ரூபாய் வசூல் செய்து இதுவரை எந்தவொரு இந்தி படமும் வசூல் செய்யாத கலெக்ஷனை அள்ளி கொலமாஸ் காட்டியுள்ளது. அல்லு அர்ஜுனின் ஸ்டார்டம் தமிழ்நாட்டில் கூட முதல் நாளில் 11 கோடி ரூபாய் வசூலை மட்டுமே அள்ளிய நிலையில், இந்தியில் அவருக்கு கிடைத்துள்ள ரசிகர்களை பார்த்து பாலிவுட் நடிகர்களே பயத்தில் இருப்பதாக கூறுகின்றனர். புஷ்பா முதல் பாகத்தில் கையை கட்டிக் கொண்டு அல்லு அர்ஜுன் போடும் சண்டைக் காட்சிகள் தியேட்டரை தெறிக்கவிட்டன.

கையையும் காலையும் கட்டிக்கிட்டு: புஷ்பா 2வில் அதே காட்சியை நினைவுப்படுத்தி கிளைமேக்ஸில் கையையும் காலையும் கட்டுங்கடா இப்போ எப்படி புஷ்பா நம்மை அடிக்கிறான்னு பாருங்க என ஹெவி பில்டப் கொடுத்து புஷ்பராஜின் கையையும் காலையும் கட்டிவிட்டு அவர் கண் முன்னாலே அவரது அண்ணன் மகளின் ஆடைகளை வில்லன் ஆட்கள் அகற்ற அப்படியே சிங்கம் போல பாய்ந்து ஒவ்வொருவரையும் பற்களால் கடித்துக் கொல்லும் காட்சிகளை எல்லாம் இயக்குநர் சுகுமார் எப்படித்தான் மாஸ் என நினைத்து மனசாட்சியே இல்லாமல் வைத்தாரோ தெரியவில்லை என நெட்டிசன்கள் புஷ்பா 2 சொதப்பிடுச்சு எனக் கூறி வருகின்றனர்.
அடுத்த பார்ட்டில் வாயையும் கட்டிட்டா: புஷ்பா 3 படத்தில் தயவு செய்து அல்லு அர்ஜுன் வாயையும் கட்டிவிட்டு ஒரு சண்டை சீனை சுகுமார் யோசித்து விட வேண்டாம் என்றும் புஷ்பா 2 படத்தில் உடைத்த ஃபர்னிச்சர்களே போதும். புஷ்பா 3 படத்திலாவது அல்லு அர்ஜுனுக்கு இருக்கும் ஸ்டார் வேல்யூ மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டார்டம்மை புரிந்துக் கொண்டு ரசிகர்களை ஏமாற்றாமல் நல்ல தரமான கதையை உருவாக்கிவிட்டு படம் பண்ணுங்கள் என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். பெரிய நடிகர்கள் ரசிகர்களை ஏமாற்றியே முதல் நாளிலேயே பில்டப் காட்டி சம்பாதித்து வருவது இந்த ஆண்டு ரொம்பவே அதிகரித்து இருப்பது ரசிகர்களை கடுப்பாக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











