வெஷ பாண்டியனின் நடிப்பு செம.. வாய் முகூர்த்தம் பலிச்சிருச்சு.. ரம்யாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் எப்போதும் ஆரிக்கு எதிராகவே பேசி வரும் ரம்யா பாண்டியனை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற ஃபிரீஸ் டாஸ்க்கின் போது உள்ளே வந்த ஹவுஸ்மேட்ஸின் உறவினர்கள் அனைவரும் ஆரியை பாராட்டினர்.

இந்த விஷயம் பாலாஜி, ரம்யா மற்றும் ரியோவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆரி மீது எப்படியாவது சேற்றை வாரியிறைக்க வேண்டும் என்று அவருடன் மல்லுக்கு நிற்கின்றனர்.

பாலாவுக்கு ஒத்து ஊதி..

பாலாவுக்கு ஒத்து ஊதி..

அதற்காக மூன்று பேரும் தீயாய் வேலை செய்கின்றனர். பாலாஜி ஆரி மீது கையை மட்டும் தான் வைக்கவில்லை. படு மோசமாக மரியாதையே இல்லாமல் நடந்து கொள்கிறார். ரம்யா, பாலாஜி என்ன பேசினாலும் அவருக்கு ஒத்து ஊதிவிட்டு ஆரியிடம் எகுறுகிறார்.

ரம்யாவின் டார்கெட்

ரம்யாவின் டார்கெட்

நேற்று நாமினேஷனின் போதும் இதுதான் நடந்தது. வெளியே வந்த பிறகு கார்டன் ஏரியாவிலும் பாலாஜியின் தவறை எதையுமே கேட்காமல், ஆரியை மட்டுமே டார்கெட் செய்து வருகிறார். நேற்றைய எபிசோடிலும் சரி இன்றைய புரமோவிலும் சரி ஆரிதான் ரம்யாவின் டார்கெட்டாக உள்ளார்.

விஷப் பூச்சி

விஷப் பூச்சி

இன்றைய புரமோவிலும் ஆரியை டார்கெட் செய்தார் ரம்யா. இதனை பார்த்த ரசிகர்கள் ரம்யாவை கண்டப்படி கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். ஏற்கனவே ரம்யாவை விஷம், விஷப்பாட்டீல், விஷப்பூச்சி என பல பெயர்களை வைத்து விளாசி வருகின்றனர்.

சொம்பு தூக்கும் டம்மி ரம்மி

புரமோவில் ரம்யா நடந்து கொண்டதை பார்த்த இந்த நெட்டிசன், வெசபாண்டியனின் நடிப்பு செம!.. சைக்கோ பயில்வானுக்கு சொம்பு தூக்கும் டம்மிரம்மி! என கழுவி ஊற்றியுள்ளார்.

எங்களுக்கு தெரியும்..

ரம்யா ஆரியிடம் நீங்க பாலாவை சோம்பேறினு சொன்னா அவரு கேக்கத்தானே செய்வாரு என்று குறிப்பிட்டுள்ளதை பார்த்த இந்த நெட்டிசன், எரியுற நெருப்புல எண்ணையை ஊத்துறதுனு கேள்வி பட்டிருப்போம், அதை நேத்து ரம்யா கிட்ட பாத்து இருப்போம். வீட்டை க்ளீன் பண்றதுக்கு வேக்கம் க்ளீனர் வரட்டும் க்ளீன் பண்றேன்னு சொன்ன சோம்பேறி பாலாவை எங்களுக்கு தெரியும் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்,

எங்க ஆதரவு இருக்கு..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் ஏதாவது சித்து வேளை பண்ணி ஆரிய வெளில அனுப்பலாம்னு மட்டும் நெனச்சுடாதீங்க எந்த சீசன்லயும் இல்லாத ஆதரவு எங்க ஆரிக்கு இருக்கு மறந்துடாதீங்க என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

வெறி ஏறிப்போச்சு..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், உள்ள வந்த எல்லாரும் ஆரியை மரியாதையோட பேசினதும் புகழ்ந்ததும் இவனுக்கு காண்டாகி வெறி ஏறிப்போச்சு முழு பைத்தியமா மாறின பாலாவை பாருங்கள்... ஆனால் ஆரியோட பொறுமை வேற லெவல் சைலன்ட்டா பாலாவோட வெறியை ரசித்தபடியே கூலா பதில் சொல்கிறார் என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

மனுசங்களா இருங்கப்பா..

எப்பா பாலாஜி ஓயாம உள்ள வம்பிழுக்கிறான் சண்டை போடறான்! ஆனால் வெளியே இத்தனை பேர் ஆரி மூக்கை ஒடை, அடி அவரனு கத்துறீங்க பாரு உங்க வெறுப்பு மிருகத்தனம்! ஒருத்தர் வாய்ச்சண்டைய கைச்சண்டயா மாற்ற நினைக்கும் ஆரி ஹேட்டர்ஸ் மனுசங்களா இருங்கப்பா! என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

முரட்டு முட்டு வேற..

ரம்யா நடந்து கொண்ட விதத்தை பார்த்த இந்த நெட்டிசன், ஊரு 2 பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்,
ஆரி, பாலா சண்டை போட்டா குள்ள நரிக்கு கொண்டாட்டம்
2 நாளைக்கு முன்னதான் ஃபிரீஸ் டாஸ்க்குல ஆரியை பார்த்து பாலாவை கொஞ்சாதீங்க, எனக்கு புடிக்கல, சண்டை போடுங்கனு சொல்லிச்சு, வாய் முகூர்த்தம் பலிச்சிருச்சு பத்தாததுக்கு பாலாக்கு முரட்டு முட்டு வேற என விளாசியுள்ளார்.

ஆரியை அனுப்ப திட்டம் போல

காதல் கண் கட்டுதுனு ஆரம்பிச்சு இப்ப ஷிவானி டாப்பிக் விடுங்கனு கத்திட்டு இருக்கான் பாலாஜி.. நல்லா வியூஸ் வருதுன்னு நைட் நடந்த சண்டையெல்லாம் போட்டுட்டு இருக்கான்.. ஆரியை அவரா வெளிய அனுப்ப திட்டம் போல என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

விகாரமாய் தெரியும் ரம்யா..

ரம்யாவை பார்த்தாலே கேவலமா இருக்கு... ஆரிக்கு மட்டுமே எப்பவும் அகைன்ஸ்ட்டா பேசுறதை பொழப்பாகவே வச்சிருக்கிற இவளுக்கு பாலாவோட தவறுகள் தெரியாமல் போனது என்னவோ சிரிப்புதான் வருது அழகு முகத்தில் அல்ல அகத்தில் தான் இருக்குன்னு ரம்யாவை பார்த்து தெரிஞ்சுக்கலாம் விகாரமாய் தெரிகிறாள் ரம்யா என்று கழுவி ஊற்றியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X