நான் கார்னரு.. சத்தியமா நான் கார்னரு.. நம்புங்க சார்.. ரியோவை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ரியோவை மரண பங்கம் செய்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரேங்க் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதற்காக ஆரியிடம் ஆர்க்யூ செய்கிறார் ரியோ. ஒரு கட்டத்தில் நீங்கள் என்னை கார்னர் செய்கிறீர்கள் என்று கூறி டிஸ்கஷனில் இருந்து வெளியேறுகிறார்.

அர்ச்சனா வெளியேறியதிலிருந்து..

அர்ச்சனா வெளியேறியதிலிருந்து..

பிக்பாஸ் வீட்டிலிருந்து அர்ச்சனா வெளியேற்றப்பட்டதற்கு ஆரிதான் காரணம் என்று நினைத்துள்ள ரியோ, அவரிடம் முகத்தை காட்டி வருகிறார். பிக்பாஸ் வீட்டில் ஆரியை யாருமே பேச விடுவதில்லை. அவர் என்ன பேசினாலும் அவரை டேமேஜ் செய்து வாயடைக்க செய்கின்றனர்.

ஆரியை டார்கெட் செய்து..

ஆரியை டார்கெட் செய்து..

பால் கேட்ச் டாஸ்க்கிலேயே ரியோ ஆரியிடம் சீறினார். இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் ரியோ மீண்டும் ஆரியை டார்கெட் செய்வதை பார்த்த ரசிகர்கள் ரியோவை மரணமாய் கலாய்த்துள்ளனர்.

ஹார்ட் அட்டாக் வரணுமா?

ஹார்ட் அட்டாக் வரணுமா?

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், மூணு நாளா தூங்க விடாம டாஸ்க் பண்ண வச்சிட்டு! அவனவன் தூக்கமில்லாமல் மூலை குழம்பி உட்கார்ந்து இருக்கப்ப! ஸ்ட்ரெஸ்ஃபுல் ரேங்கிங் டாஸ்க்க கொடுங்க! ஸ்ட்ரெஸ்ல எல்லாருக்கும் பிபி ஏறி ஹார்ட் அட்டாக் வரணுமா! மனசாட்சி இருக்கா பிக்பாஸ் டீம்? மனுசங்க தானே! என கேட்டுள்ளார்.

சத்தியமா நான் கார்னரு

சத்தியமா நான் கார்னரு

இன்றைய இரண்டாவது புரமோவில் ரியோ பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், நான் கார்னரு.. சத்தியமா நான் கார்னரு!.. நம்புங்க சார்! ரியோ என ரியோவை கலாய்த்துள்ளார்.

இப்படி வெளிப்படுத்துகிறார்

இப்படி வெளிப்படுத்துகிறார்

இரண்டாவது புரமோவில் ரியோ ஆரியிடம் முகத்தை காட்டுவதை பார்த்த இந்த நெட்டிசன், ரியோ ஏற்கனவே ஆரி மேல இருக்குற கோபத்தை இப்படி வெளிப்படுத்துறார் என கூறியுள்ளார்.

அர்ச்சனா மடி விசிறி

அர்ச்சனா மடி விசிறி

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரியோ ராஜ் நீ டிஜிட்டல் அன்னை அர்ச்சனா மடி விசிறி என்பதால் தானே அவர் வெளியேறுனதுல இருந்து ஆரிய டார்க்கட் பண்ற நீ? என்று விளாசியுள்ளார்.

ரிட்டர்ன் வருது

ரிட்டர்ன் வருது

ரியோ அவருடைய மருந்தையே சுவைக்கிறார்.. அனிதாவுக்கு பண்ணினது ரிட்டர்ன் வருது என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஹீரோதான்டா..

ஹீரோதான்டா..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் ரியோவை நம்புங்கடா... சத்தியமா நானும் ஹீரோ தாண்டா.. என்று சொல்வது போல் மரண பங்கம் செய்துள்ளார்.

கைகால் புரியாமல் ஆடுகிறார்

கைகால் புரியாமல் ஆடுகிறார்

ரியோ நடித்த படத்தின் பாடலை பிக்பாஸில் போட்டது முதல் கைகால் புரியாமல் ஆடுகிறார். ஒரு படத்தில் நடித்திருக்கார் என்பதே அன்றுதான் தெரியும். எல்லாத்துக்கும் முகத்தை முழநீளம் வச்சுகிட்டு கோபம்வருது. ஆரி இவரைப் போல் பேசமாட்டார் என்பதால் அவரிடமே முகத்தை காட்டுகிறார் என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X