குட்டி சினேகன் முதல்முறையாக ஒரு ஆணை கட்டிபிடித்து உள்ளார்.. ரியோவை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ரியோவை பங்கமாய் கலாய்த்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஆரியை பாராட்டினர். டிக்கெட் டூ ஃபினாலே 8வது டாஸ்க்கில் தனக்கான வாக்கியத்தை ஃபன்னாக படித்து நேரத்தை சேவ் செய்தார் ஆரி.
அதனை பார்த்த ரியோ மற்றும் ரம்யா ஆரியை பாராட்டினர். ரியோ ஆரி முதல் முறையாக ஃபன் பண்ணியிருக்கிறார் என அவரை கட்டியணைத்தார்.

முதல் முறையாக
ஏற்கனேவே பெண் போட்டியாளர்களை ரியோ கட்டியணைக்கிறார் என அவரை குட்டி சினேகன், கட்டிப்பிடி வைத்தியர் என அழைத்து வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் ரியோ ஆரியை கட்டியணைத்ததை பார்த்த நெட்டிசன்ஸ், முதல் முறையாக ரியோ ஒரு ஆணை கட்டியணைத்துள்ளார் என பங்கம் செய்து வருகின்றனர்.

உதவுங்கள் மக்களே
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதுவரை கைவசம் இருந்த டாஸ்க் அனைத்தும் இந்த 4வது சீசனோடு காலியாகிவிட்டதால் புதிதாக டாஸ்க்குகள் இருந்தால் கொடுத்து உதவுமாறு அன்புடன் மக்களை கேட்டுகொள்கிறோம்.. என பதிவிட்டுள்ளார்.

தலைவன் ஜெயிப்பாரு
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் கடைசி நிமிஷம் வரைக்கும் பல திருப்பங்கள், தடங்கல் நடக்கிறது நமக்கு என்ன புதுசா? இதெல்லாம் தாண்டி தான் ஜெயிச்சு ஆகனும்! தலைவன் ஜெயிப்பாரு.. என ஆரிக்கு ஆதரவாய் டிவிட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.

பிண்றீங்கப்பா..
ஆரி ஃபன் பண்ணியதற்காக அவரை சக ஹவுஸ்மேட்ஸ் பாராட்டியதை பார்த்த இந்த நெட்டிசன், அவர் சிரிச்சிக்கிட்டே இருந்தா அழகுதான்! ரொம்ப சிரிச்சா ஏமாளியாக்கிடுவீங்க.. என்னமோ 36 வருசமா ஆரிக்கு சிரிக்கவே தெரியாத மாறியும்! இன்னிக்கு தான் சிரிக்க கத்துக்கிட்ட மாறியும்! பிண்றீங்கப்பா என பதிவிட்டுள்ளார்.

கோமால இருந்தீங்களா?
இவனுங்க அப்படி இத்தன நாள் என்ன ஃபன் பண்ணி கிழிச்சிட்டானுங்க.. லாஸ்ட் சீசன் பாத்துட்டு வந்து அப்படியே காப்பி அடிச்சிட்டு இவனுங்க அவரை சொல்றானுங்க.. நேத்து ரம்யா ஆரியைப் பத்தி ரொம்ப நேரம் பேசுனப்போ கோமாக்கு போயிட்டியா? ரியோ.. அவர் இப்படி இருந்தா உங்களுக்கு தான் கன்டன்ட் இருக்காது என விளாசியுள்ளார். இவனுங்க அப்படி இத்தன நாள் என்ன ஃபன் பண்ணி கிழிச்சிட்டானுங்க.. லாஸ்ட் சீசன் பாத்துட்டு வந்து அப்படியே காப்பி அடிச்சிட்டு இவனுங்க அவரை சொல்றானுங்க.. நேத்து ரம்யா ஆரியைப் பத்தி ரொம்ப நேரம் பேசுனப்போ கோமாக்கு போயிட்டியா? ரியோ.. அவர் இப்படி இருந்தா உங்களுக்கு தான் கன்டன்ட் இருக்காது என விளாசியுள்ளார்.

ஆண் ஒருவரை..
பிக்பாஸ் இரண்டாவது புரமோவில் ஆரி பேசுவது புரியவில்லை என்பதை குறிப்பிடும் வகையில், சத்தியமா புரியல.. ஆரி என்ன சொன்னார்.. என ஒரு படத்தை ஷேர் செய்தும்.. குட்டி சினேகன் ரியோ முதல்முறையாக ஒரு ஆண் ஒருவரை கட்டிபிடித்து உள்ளார்!!! என்று ரியோவை பங்கமாக்கி ஒரு போட்டோவையுணேர் செய்துள்ளார்.

நேரம் வரும்.. வெல்லும்..
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வழிக்கு வந்துவிட்டார்கள்.. வாழ்த்துக்கள் விஜய் டிவி.. மனமாற்றத்துக்கு..என்னதான் நீங்கள் தலைகீழாக நின்றாலும்
ஆரிக்காக தான் நீங்கள் பிக்பாஸ்4 ஆரம்பித்தீர்கள்
என்பது எழுதப்பட்ட விதி. நன்மை எல்லா நேரமும்
எல்லா இடங்களிலும் தோற்காது. அதற்கான நேரம் வரும் போது சரியான இடத்தில் வெல்லும் என்று பதிவிட்டுள்ளார்.

குரூப்பும் கூட்டமுமாதானே..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதுக்கு முன்னாடி எங்கேடா அவர பண்ண விட்டீங்க.. எல்லாரும் ஆளுக்கொரு குரூப்பும் கூட்டமுமாதானே அலைஞ்சீங்க என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஃபன்னா விளையாடுங்க..
புரமோவில் ஆரி சிரிப்பதை பார்த்த இந்த நெட்டிசன், இப்படி சிரிச்சு ஃபன்னா விளையாடுங்க ஆரி சார் என்று பதிவிட்டுள்ளார்.

வேற லெவல்..
ஆரி இதுக்கு விளக்கம் சொல்லி டைம்ம வேஸ்ட்டாக்க விரும்பல.. ஏன்னா காலத்தை அழியேல்னு சொல்லி கொடுத்து இருக்கீங்க.. என ஆரி பேசியதை பதிவிட்டு, வேற லெவல் பதில் ஆரி புரோ என டிவிட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











