குட்டி சினேகன்.. கட்டிப்புடி வைத்தியர்.. ரியோவை கண்டமேனிக்கு பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: மனைவியை கட்டிப்பிடித்து கதறிய ரியோவை பங்கமாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ரியோவின் மனைவி ஸ்ருதி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
தனது மனைவியை பார்த்ததும் ஓடிப்போய் அவரை கட்டியணைத்து கண்ணீர்விட்டு கதறி அழுகிறார் ரியோ. அதனை பார்த்த நெட்டிசன்கள், ரியோவை மரணமாய் கலாய்த்து வருகின்றனர்.

கட்டிப்பிடிக்கும் ரியோ
ஏற்கனவே எப்போதும் அர்ச்சனாவின் மடியிலேயே படுத்திருக்கிறார். என்ன விஷயம் என்றாலும் கேபியை கட்டிப்பிடிக்கிறார் என்றும் மற்ற போட்டியாளர்களையும் விடுவதில்லை என்றும் விளாசி வருகின்றனர்.

கட்டிப்புடி வைத்தியர்
மேலும் ரியோவை குட்டி சினேகன் என்றும் கட்டிப்புடி வைத்தியர் என்றும் கிண்லடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் அவரை வச்சு செய்துள்ளனர்.

மன்னிப்பும் ரொம்ப அழகு
புரமோவில் ரியோ தனது மனைவியை கட்டிப்பிடிப்பதை பார்த்த இந்த நெட்டிசன், அழகான காதலும் கண்ணீரும் மன்னிப்பும் ரொம்ப அழகு!! என பதிவிட்டுள்ளார்.

லீலைகள் ஆரம்பம்
புரமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு வரும் தனது மனைவியை ரியோ கட்டிப்பிடிப்பதை பார்த்த இந்த நெட்டிசன், குட்டி சினேகன்...லீலைகள் ஆரம்பம் என கிண்டலடித்துள்ளார்.

அதனாலதான் இந்த பேச்சு
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரியோவின் மனைவி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், இந்த நெட்டிசன், கட்டிபுடி வைத்தியர் ரியோவின் லீலைகள் கண் முன்னே வந்து கலவரம் பண்ணியிருக்கும் ரியோ மனைவிக்கு!... அதனாலே இந்த பேச்சு! என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

நல்லபுத்தி சொல்லிக் கொடுங்க
பிக்பாஸ் வீட்டுக்குள் தனது கணவர் ரியோவை அவரது மனைவி ஸ்ருதி சந்திக்கும் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நல்லபுத்திய சொல்லிக் கொடுத்துட்டு வாங்க என விளாசியுள்ளார்.

ஆரி மனைவி வருவாங்க
அடுத்து புரமோவுல என்ன ஆரி அவங்க மனைவி வருவாங்க அதானே.. என கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

கடுப்ப தீர்த்துக்குறாங்க
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரியோவின் மனைவி நண்பர்களின் கடுப்புன்னு சொல்லி, அவங்க கடுப்ப தீர்த்துக்குறாங்க என்று கூறியுள்ளார்.

வெளியே வா இருக்கு
புரமோவில் ரியோவின் மனைவி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், நண்பர்களின் கடுப்பு.. வெளிய வா உனக்கு இருக்கு.. என கிண்டலடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











