ஆரியை கெட்டவரா புரிய வைக்க புதுசா எஃபோர்ட் போடுறாராம்.. ரியோவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ரியோவை விளாசி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ஆரி குறித்து பேசுகிறார் ரியோ. அப்போது ஆரி பயமுறுத்துகிறார் என்றும் அவர் மீது வெறுப்புதான் வருகிறது என்றும் கூறியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆரியை கெட்டவராக காட்ட இந்த வாரம் ரியோ முயற்சிப்பதாக கூறி விளாசி வருகின்றனர்.

அவரு என்ன பண்ணுவாரு?

அவரு என்ன பண்ணுவாரு?

நீங்க ஆரிய பார்த்து பயப்படல மக்கள பாத்துதான் பயப்படுறீங்க.. நீங்க எல்லாம் சரியாக பண்ணோம்னு நம்பிக்கை இருந்தா ஏன் இவ்ளோ பயப்படுறீங்க? உங்க இன்செக்யூரிட்டிக்கு அவரு என்ன பண்ணுவாரு? என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

இப்படிதான் புலம்புவீங்க

இப்படிதான் புலம்புவீங்க

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எல்லாரிடமும் குறைகளும் இருக்கு நிறைகளும் இருக்கு!
அவர் உங்கள ஃபிரேம் பண்றாருங்கிற மெண்டல் பிளாக் தான் உங்க பயத்துக்கு காரணம்! ஆரி இல்லாம சுரேஷ், அனிதா, பாலாஜி யார் உங்களுக்கு எதிரா இருந்தாலும் இப்படி தான் புலம்புவீங்க என்று குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

தேடி பிடித்து கெட்டப்பெயர்

தேடி பிடித்து கெட்டப்பெயர்

இரண்டாவழது புரமோவில் ரியோ பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ரொம்ப அதிகமாக யோசிச்சு அவர் மேல என்ன குறை சொல்லலாம்னு போன வாரத்துல இருந்த இவனுங்க தான் அவர்கிட்ட குறைய தேடிட்டு இருக்கானுங்க அவர் கூட குறை இருந்தா தான் சொல்லுவாரு இவனுங்க தேடி கண்டு பிடித்து கெட்ட பெயர் உண்டாக்குறாங்க என்று கூறியுள்ளார்.

கூப்பாடு போடுறீங்க..

கூப்பாடு போடுறீங்க..

புரமோவில் ரியோ பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், நீங்கமட்டும் ஏண்டா எப்ப பார்த்தாலும் ஆரியை பற்றி குறை சொல்லிகிட்டே இருக்கீங்க!.. ஆனா ஆரி மட்டும் எதையாவது சொன்னா போதும் உடனே குறை சொல்றாரு குறை சொல்றாருன்னு கூப்பாடு போடுறீங்க! என்று விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

புதுசா எஃபோர்ட் போடுறாராம்

புதுசா எஃபோர்ட் போடுறாராம்

புரமோவில் ரியோ ஆரி குறித்து பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன் கோமாளி ரியோ மக்களுக்கு ஆரியை கெட்டவரா புரிய வைக்க புதுசா எப்போர்ட் போடுறாராம்! அட போங்கடா டேய்!... இப்படிதான் பாலா பண்ணாரு.. அதனால இப்ப பல்லுவிழுந்து கெடக்குறார் என்று கலாய்த்துள்ளார்.

புரிந்துகொண்டவர் ஆரி

புரிந்துகொண்டவர் ஆரி

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாசத்தையும் வேசத்தையும் தாண்டிதான் இந்த பிக்பாஸ் கேம் ஷோ!.. நன்றாக புரிந்துகொண்டவர் ஆரி!... புரியாத புண்ணாக்குகள் நீங்கள் என்று மொத்த ஹவுஸ்மேட்ஸையும் சாடியுள்ளார் இந்த நெட்டிசன்.

வெறுக்க வச்சுடுவாங்க

வெறுக்க வச்சுடுவாங்க

குடும்பங்கள் வந்து விட்டு போனதுல இருந்து.. ஆரியின் குறைகளை கண்டு பிடித்து மக்களுக்கு காட்டி ஓட்டுகளை குறைக்கிறாரம்? விஜய் டிவி என்ன ரியோக்கு ஒத்து ஓதுறியா
அவர் குழந்தைய பத்தி ஒரு வார்த்தை சொல்லி இருப்பார்.. ஆனா இவனுங்க அதை 10 முறை சொல்லி அவரை வெறுக்க வச்சிடுவாங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

பயமா இருக்கா ரியோ?

பயமா இருக்கா ரியோ?

11 முறை நடந்த வொர்ஸ்ட் பர்ஃபாமன்ஸ் நாமினேஷன்ல 8 முறை அவரை நாமினேட் செய்யும் போது நல்ல இருந்ததா ரியோ? 8 காரணங்கள் ஞாபகம் இருக்கா? ஆரிய கேளு!
80 நாட்கள் அர்ச்சனா மடியில் படுத்து, தலைக்கு மாசாஜ் செய்த போது நல்லா இருந்ததா? உன்னோட தப்பை சொல்லும் போது பயமா இருக்கா? என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

என்ன நடிப்புடா..

என்ன நடிப்புடா..

ரியோ பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், பாலா ஆரியை பார்த்து மன நோயாளி போல் கத்தும் போது நன்றாக இருந்ததா? அவனையே நீ பொய் ஆறுதல் படுத்தும் போது? அவனையே செருப்பால் அடித்த போது நன்றாக இருந்ததா? காலை நீட்டி காட்டிய போது எப்படி? அப்போதெல்லாம் வராத பயம் ஆரி கேட்டால் வருகிறது? என்ன நடிப்பு டா! என விளாசியுள்ளார்.

புலம்பல் இது..

புலம்பல் இது..

ரியோ நீங்க எதுக்கு உள்ள வந்ததேன் தெரியாமல் இவ்வளவு நாள் இருந்துட்டு இருக்கீங்க அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பும் புலம்பல் இது என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X