Samantha: எல்லாமே நடிப்பா கோபால்.. வெளிநாட்டில் ஆட்டம் போடும் சமந்தா.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

சென்னை: நடிகை சமந்தா சமீபத்தில் சாகுந்தலம் படத்தின் ப்ரொமோஷனுக்காக மீண்டும் அழுகாச்சி டிராமா செய்தார் என்றும் தற்போது சிட்டாடல் படத்தில் நடிக்க வெளிநாட்டில் சிட்டாக பறந்து வருவதை பார்த்த நெட்டிசன்கள் எல்லாமே நடிப்பா கோபால் என கலாய்த்து வருகின்றனர்.

நாக சைதன்யாவை பிரிந்த பின்னர் நடிகை சமந்தா பற்றி ஏகப்பட்ட ட்ரோல்கள் வெளியாகின. சமந்தா தான் விவாகரத்துக்கு காரணம் என பேசப்பட்டது.

Netizens trolls Samantha for her sympathy drama for Shaakuntalam

நாக சைதன்யா இன்னொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதால் தான் விவாகரத்து செய்து கொண்டனர் என்றும் கூறினர்.

மயோசிடிஸ் பாதிப்பு: நாக சைதன்யாவை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த சமந்தாவுக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் கிடைத்தன. அப்போது தான் அரிய வகை நோயான மயோசிடிஸ் பாதிப்பால் சமந்தா சுமார் 8 மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார்.

Netizens trolls Samantha for her sympathy drama for Shaakuntalam

எழுந்து கூட சமந்தாவால் இனி நடக்கக் கூட முடியாது என பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், தீவிர சிகிச்சை செய்து குணமடைந்தார் சமந்தா.

யசோதா படத்துக்கு கண்ணீர் ப்ரொமோஷன்: சமந்தா, வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியான யசோதா படத்தின் சமயத்தில் தான் தனக்கு இப்படியொரு நோய் பாதிப்பு உள்ளது என்பதையே ரிவீல் செய்திருந்தார் சமந்தா.

மேலும், ஸ்ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே டப்பிங் பேசும் போட்டோக்களை எல்லாம் ஷேர் செய்தும் பேட்டிகளில் கண்ணீர் விட்டு அழுதும் அவர் கொடுத்த ப்ரொமோஷன் அந்த படத்தை வெற்றிப் படமாக மாற்றியது.

Netizens trolls Samantha for her sympathy drama for Shaakuntalam

மீண்டும் வொர்க்கவுட்: அதன் பிறகு நடிகை சமந்தா கம்பேக் கொடுத்ததாகவும் மீண்டும் பழையபடி வொர்க்கவுட் செய்யும் போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். பீனிக்ஸ் பறவை சமந்தா என ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.

ஆனால், சாகுந்தலம் படத்தின் ப்ரொமோஷன் சமயத்தில் மீண்டும் தனது உடல் நலக்குறைவை முன் வைத்து அவர் ப்ரொமோஷன் செய்தது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது என ஏகப்பட்ட விமர்சனங்களும் ட்ரோல்களும் சோஷியல் மீடியாவில் குவிந்து வருகின்றன.

Netizens trolls Samantha for her sympathy drama for Shaakuntalam

அழுகாச்சி டிராமா: சாகுந்தலம் படத்தையும் சிம்பதி க்ரியேட் செய்து சக்சஸ் ஆக்கி விடலாம் என சமந்தா போட்டக் கணக்கு பலனளிக்கவில்லை என பிஸ்மி உள்ளிட்ட சினிமா பிரபலங்களே வெளிப்படையாக பேசினர். அந்த படமும் யசோதா படம் அளவுக்கு விறுவிறுப்பாக இல்லாத நிலையில், பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடி வாங்கியது.

லண்டனில் செம ஆட்டம்: சாகுந்தலம் படத்திற்கு என்னதான் சிம்பதி டிராமா பண்ணினாலும் படம் ஓடவில்லை என்பதை அறிந்து கொண்ட சமந்தா அடுத்ததாக சிட்டாடல் வெப்சீரிஸின் ப்ரீமியருக்காக லண்டன் பறந்துள்ளார். வருண் தவான் உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியாகின.

மேலும், தற்போது தனது டீம் உடன் லண்டனை சுற்றி செம ஆட்டம் போடும் போட்டோக்களையும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார் சமந்தா.

எல்லாமே நடிப்பா கோபால்: சமந்தா சமீபத்தில் தான் சாகுந்தலம் பட ப்ரொமோஷனுக்கு வரும் போது கேமரா லைட் பட்டதுமே கண்கள் கூசுவது போன்றும், ரொம்பவே உடல் நலக்குறைவால் சிரமப்படுவர் போலவும் காட்சியளித்தார்.

Netizens trolls Samantha for her sympathy drama for Shaakuntalam

ஆனால், உடனடியாகவே அவரது செயல்களில் இப்படியொரு மாற்றத்தை பார்த்த ரசிகர்கள் அப்போ ப்ரொமோஷனுக்காக பண்ண நடிப்பா அதெல்லாம் சமந்தா என சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்து விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X