போங்கு செய்தாரா சனம் ஷெட்டி.. வொர்க் அவுட் வீடியோவை பார்த்து பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: சனம் ஷெட்டி ஷேர் செய்துள்ள வொர்க் அவுட் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் செய்துள்ளனர்.
நடிகை சனம் ஷெட்டி பிரபல மாடல் ஆவார். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ள சனம் ஷெட்டி மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறையில் நுழைந்தார்.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் இதுவரை சொல்லும் அளவுக்கு ஹிட்டாகவில்லை.

வாக்குவாதம்
இந்நிலையில் சனம் ஷெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் எதற்கெடுத்தாலும் சக ஹவுஸ்மேட்டுகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

வெளியேற்றப்பட்ட சனம்
இதனால் ரசிகர்களின் கடுப்புக்கு ஆளானார். இருந்த போதும் டாஸ்க்குகளை சிறப்பாக செய்து வந்தார். இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சனம்.

திணறும் இணையம்
இதனால் அவரது ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சனம் ஷெட்டி தொடர்ந்து தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். பிகினி, சேலை என மாறி மாறி அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் இணையத்தை திணறடித்து வருகிறது.
வெயிட்டை தூக்கி..
இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி ஜிம்மில் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் வெயிட் லிஃப்ட் செய்கிறார் சனம் ஷெட்டி. ஆனால் வெறும் ராட் மட்டும் தான் உள்ளது, அதில் வெயிட்டுகள் இருப்பது போன்று தெரியவில்லை.

சுற்றி பார்க்க?
இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் வெறும் ராடை மட்டும்தான் தூக்குகிறீர்களா என கேட்டு வருகின்றனர். மேலும் ஜிம்மை சுற்றிப் பார்க்கதான் சென்றீர்களா என்றும் கேட்டு வருகின்றனர். அதேநேரத்தில் சிலர் தலைவி தீயாய் வொர்க்கவுட் செய்கிறார்கள் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











