twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொஞ்சமாச்சும் சொந்தமா யோசிங்கப்பா...விக்ரமை அப்படியே காப்பி அடிச்சிருக்கீங்க

    |

    சென்னை :கடந்த சில நாட்களாக எந்த படம் பற்றி, எந்த அப்டேட் அல்லது அறிவிப்பு வந்தாலும் அதை ஏற்கனவே வந்த படத்துடன் ஒப்பிட்டு ஏதாவது சொல்லி சோஷியல் மீடியாவில் கலாய்ப்பது அதிகரித்து வருகிறது.

    நெட்டிசன்களுக்கும், மீம் கிரியேட்டர்களுக்கும் வேலை வைக்கும் விதமாக முந்தைய ஹிட் படங்களில் இருந்து சில காட்சிகள் மற்ற படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றையும் கண்டுபிடித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    அப்படி தான் நேற்று வெளியிடப்பட்ட சந்தானத்தில் குலுகுலு பட போஸ்டரையும் நெட்டிசன்கள் கண்டபிடி கிண்டலடித்து வருகிறார்கள். கொஞ்சமாவது சொந்தமா யோசிங்க. அப்படியே அப்பட்டமா காப்பி அடிச்சு வச்சா எங்களுக்கு தெரியாதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    குலு குலு போஸ்டர் வெளியீடு

    குலு குலு போஸ்டர் வெளியீடு

    மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய டைரக்டர் ரத்ன குமார் இயக்க உள்ள படம் குலு குலு. சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் ஜுலை 29 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் தமிழக தியேட்டர் உரிமத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் முவிஸ் கைப்பற்றி உள்ளது.ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில் இன்று டீசர் வெளியிடப்பட்டது.

    ஏன் இப்படி ஒரு டைட்டில்

    ஏன் இப்படி ஒரு டைட்டில்

    அது என்ன படத்திற்கு குலுகுலு என டைட்டில் வைத்துள்ளார்கள். குளிர் பிரதேசத்தில் நடப்பதாக எடுக்கப்பட்டதால் இப்படி ஒரு டைட்டிலா என கேட்டால், காரணம் அது கிடையாதாம். படத்தின் கதைப்படி, சந்தானத்திற்கு 13 மொழிகள் தெரியுமாம். யார் எதை பற்றி, என்ன கேட்டாளாலும் தெள்ள தெளிவாக விளக்கம் கொடுப்பாராம். இதனால் கூகுள் போல் இருப்பதால், கூகுள் என்ற பெயர் மாறி குலுகுலு என மாறி விடுமாம்.

    என்ன இப்படி காப்பி அடிச்சிருக்கீங்க

    என்ன இப்படி காப்பி அடிச்சிருக்கீங்க

    படத்தின் ரிலீஸ் தேதிக்காக கையில் மிஷின் கன் போன்றதை வைத்து தீயால் சுடுவது போல் சந்தானம் ஆக்ரோஷமாக நிற்கும் மாஸ் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்டில் பார்ப்பதற்கு அப்படியே, விக்ரம் பட க்ளைமாக்சில் கமல், டெர்மினேட்டர் படத்தில் வரும் மெகா சைஸ் ரோலர் கன்னை கையில் வைத்து விஜய் சேதுபதி குருப் கண்டபடி சுட்டு தள்ளுவார். இந்த சீனை நினைவுபடுத்துவதாக உள்ளது.

    அதையே கலாய்ச்சாங்க

    அதையே கலாய்ச்சாங்க

    உண்மையில் இந்த சீனே கேஜிஎஃப் 2 படத்தில் யாஷ், போலீஸ் ஸ்டேஷன் முன் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை வரிசையாக சுட்டுத்தள்ளுவார். இந்த சீனில் இருந்து லோகேஷ் கனகராஜ் சுட்டுள்ளார் என விமர்சிக்கப்பட்டது. ஆனால் கேஜிஎஃப் 2 படத்திற்கு முன் கார்த்தி நடித்த கைதி படத்தின் க்ளைமாக்சிலும் இதே போல ஒரு சீனை லோகேஷ் கனகராஜ் வைத்திருப்பார்.இப்போது அதே போசில் சந்தானம் நின்று, சுடும் போஸ்டரை நெட்டிசன்கள் கண்டபடி கலாய்த்து வருகிறார்கள்.

    சொந்தமா யோசிங்கப்பா

    சொந்தமா யோசிங்கப்பா

    ஏற்கனவே ஒரு குருப் சூர்யாவை பாராட்டுவதற்காக இப்போ வரை ரோலக்ஸ் என்று தான் சொல்லி வருகிறது. பாராட்டுவது, உதாரணம் சொல்வது, மாஸ் காட்டுவது என எல்லாவற்றிற்கும் விக்ரம் படம் தானா. ஏன் நீங்களா எதுவும் சொந்தமாக யோசிக்கவோ, உருவாக்கவோ மாட்டீங்களா. இதே போசில் தான் ஏற்கனவே கார்த்தி, கமல் போஸ்டர்களை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு விட்டாரே...நீங்களும் ஏன் அதையே வச்சிருக்கீங்க என கிண்டல் செய்து வருகின்றனர்.

    English summary
    Yesterday Sanathanam starring Gulu Gulu movie poster released along with release date. This is looking like Kamal still from the movie Vikram. Netizens troll this poster.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X