Sarathkumar: பூமர்.. கிரிஞ்ச்.. ஸ்மார்ட்டாக பதிலளிக்க முயன்ற சரத்குமார்..வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்
சென்னை: விஷ்ணு வர்தன் இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவான படமான நேசிப்பாயா படம் வரும் 14ஆம் தேதி தைப் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்த நடிகர் சரத்குமார், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அளித்த பதிலை இணையவாசிகள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றார்கள். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தில், சரத்குமார், பிரபு, குஷ்பு உள்ளிட்ட மூத்த நடிகர்களும் நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பின்னர், தமிழில் விஷ்ணு வர்தன் படம் இயக்குவதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த பிரிட்டோ இந்தப் படத்தினை தயாரித்துள்ளதால், படத்தின் மீது தனிப் பார்வை திரைத்துறையில் ஏற்பட்டுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினை வாழ்த்திய சிவகார்த்திகேயன், இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா குறித்து பேசியது பலரது கவனத்தினை ஈர்த்தது. குறிப்பாக அவரது பேச்சு ஏற்புடையதாகவும் இருந்தது. அதிலும் குறிப்பாக, அவர் யுவன் சங்கர் ராஜவை நோக்கி, சார், உங்களையும் நா. முத்துகுமார் காம்பினேஷனை நாங்க ரொம்பவும் மிஸ் செய்கின்றோம் எனக் கூறினார். இது பலரது கவனத்தினை ஈர்த்தது.
நேசிப்பாயா: பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த அஜித்குமாரின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகவில்லை என படக்குழு தெரிவித்த பின்னர்,பல படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக களமிறங்கியுள்ளது. இந்த ஆண்டு பொங்கலைக் குறிவைத்து இரண்டு தேதிகளில் படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. அதாவது பொங்கலுக்கு முன்னர் வரக்கூடிய வார இறுதி நாளான ஜனவரி 10ஆம் தேதியும், பொங்கல் தினமான ஜனவரி 14ஆம் தேதியும் என மொத்தம் இரண்டு நாட்களில் படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. கேம் சேஞ்சர், வணங்கான் ஏற்கனவே ரேஸில் இருந்த நிலையில், தற்போது மெட்ராஸ்காரன், மதகஜராஜா, நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

சரத் குமார்: இப்படியான நிலையில் நடிகர் சரத்குமார், இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்தார். அப்போது அவரைச் சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்கள், அவரைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது சரத்குமார், நடக்க முயற்சிக்க, உடனே பத்திரிகையாளர்கள், Wait சார் எனக் கூறிக்கொண்டே இருந்தார்கள். இதனால் ஒரு கட்டத்தில் சரத்குமார், Wait-ஆ 83 கிலோ என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வேகமாக பரவியது.
பூமர்: இதனைப் பார்த்த இணையவாசிகள், சரத்குமாரின் பதிலைக் கேட்டு, பூமர், கிரிஞ்ச் என அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலத்தில் ஒருவர் சாதாரணமாக அவரது இயல்பில் இருந்தாலே அவரை பூமர், கிரிஞ்ச் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்வது வாடிக்கையாகிவிட்டது. அப்படி இருக்கும்போது, சரத்குமாரையும் அவர்கள் ட்ரோல் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என பேசி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











