ஒளிஞ்சு ஒளிஞ்சு மிக்சர் சாப்பிட்டும் யார் எங்களை நாமினேட் பண்ணது? 3 பேரை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்பவர்களை பார்த்த நெட்டிசன்கள் அவர்களை வச்சு செய்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது தெரியவந்தது.

இவர்களில் 9 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் கேபி, ஷிவானி, ஆஜித் ஆகியோரும் நாமினேஷனுக்கு வந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

பயில்வானுக்கு படிப்பினை வரும்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த பயில்வான் குருப்புல சம்யுத்தா, ஆஜித், சிவானி இவங்களில் ஒருத்தர இந்த வாரம் காலி பண்ணனும் அப்பதான் பயில்வானுக்கு படிப்பினை வரும்! என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

என்ன மக்களே சரிதானா?

நாமினேஷன் லிஸ்ட்டை பார்த்த இந்த நெட்டிசன், இந்த வாட்டி கண்டிப்பாக ஆஜித் தான் வெளியேறுவார்..
என்ன மக்களே சரிதானா? என கேட்டுள்ளார்.

உங்களுக்கே இது அடுக்குமா?

லிஸ்ட்டில் ஷிவானி பெயர் இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், மிக்சர் தின்னி ஷிவானியுமா? அடேய் இந்ந வாயில்லா பூச்சியை யாருடா சிக்கவச்சது? உங்களுக்கே இது அடுக்குமா? என கேட்டுள்ளார்.

அப்பாவி ரியோ

ரியோ குழப்பத்தில் இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், தம்பி புலிகேசி உன்னை எப்பவும் குழப்பத்திலையே வச்சிருப்பாயங்க உங்க ஹவுஸ்மேட்ஸ்.. உண்மையில் அப்பாவி ரியோ என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஏத்தி விட்டு காலி பண்ணிடும்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாலாஜி முருகதாஸ் சப்போர்ட்டர்ஸுக்கு ஒரு அட்வைஸ்.. சுசித்ரா இருக்குற வரைக்கும் பாலாஜிக்கு நல்லது இல்லை.. அது ஒன்னே அவன ஏத்தி விட்டு ஏத்தி விட்டு காலி பண்ணிடும்.. புரிஞ்சா நல்லது என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

சவாலான போட்டியாளர்

கேபி நாமினேஷனில் வந்துள்ளதை பார்த்த இந்த நெட்டிசன், இன்று முதல் கேப்ரியல்லா சவாலான போட்டியாளர் என்று அழைக்கப்படுவார்! நாமினேஷனில் வந்தது நல்லது என கூறியுள்ளார். கேபி நாமினேஷனில் வந்துள்ளதை பார்த்த இந்த நெட்டிசன், இன்று முதல் கேப்ரியல்லா சவாலான போட்டியாளர் என்று அழைக்கப்படுவார்! நாமினேஷனில் வந்தது நல்லது என கூறியுள்ளார்.

மரண கலாய்

ஷிவானி, கேபி, ஆஜித் ஆகியோர் நாமினேஷனில் இடம் பெற்றிருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், யார் கண்ணிலேயேயும் படாம சைலண்டா ஒளிஞ்சு ஒளிஞ்சு மிக்சர் திண்ணாலும் யார்ரா எங்களை நாமினேட் பண்ணியது என கேட்கும் ஷிவானி. கேப்பி, ஆஜித்! என மரண கலாய் கலாய்த்துள்ளார்.

பார்த்து பண்ணி விடுங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஒரு வழியா ரெண்டு முக்கியமான மிக்சர் நாமினேஷனுக்கு வந்துட்டாங்க.. மக்களே பார்த்து பண்ணி விடுங்க என கூறியுள்ளார்.

ஃபேன் கேர்ள்ஸலாம்

மூணு பேர்ல ஒருத்தர வெளியே போட்டும்! ஆஜித், ஷிவானி, அல்லது சுசித்ரா. அந்த வீட்ல அசிஸ்டன்ட்ஸ் ஃபேன் கேர்ள்ஸலாம் வேணாம்.. போட்டியாளர்கள் மட்டும் உள்ள இருக்கட்டும்! என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X