நீ தான் தைரியமான ஆளாச்சே.. இப்ப சொல்லு பார்ப்போம்.. ஷிவானியை டார்கெட் பண்ணும் நெட்டிசன்ஸ்!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், ஷிவானியை செமையா ட்ரோல் செய்து வருகின்றனர்.

Recommended Video

Aari or Bala? Who is the hero | BIG BOSS TAMIL | Filmibeat Tamil

பாலாஜி மற்றும் ஷிவானியின் ரசிகர்கள், ஆரி தான் அவுட்டாகி போர்டை கழுத்தில் மாட்டி இருக்கிறார். போன புரமோவிலே பார்த்துட்டோம் என நக்கலடித்து வருகின்றனர்.

ஆரியின் அந்த கேள்விக்கு ஷிவானி என்ன பதில் சொல்லி இருப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டு ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

ரியோவை வச்சு செய்த ரசிகர்கள்

ரியோவை வச்சு செய்த ரசிகர்கள்

ஏற்கனவே நடிகர் ரியோ ராஜை விஜய் டிவி புராடக்ட் என கலாய்த்து வரும் ரசிகர்கள், இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்து விட்டு, அர்ச்சனா அக்கா மடியில் ஹாயாக படுத்து இருக்கும் அவரை வச்சு விளாசி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரும் தனி போட்டியாளர்கள் என்றும் குரூப்பாக சேர்ந்து கொண்டு விளையாடக் கூடாது என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இரண்டாவது புரமோ

இரண்டாவது புரமோ

முதல் புரமோவை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரமோவை பார்த்த ரசிகர்கள், கால் சென்டர் அதிகாரியாக ஷிவானி செம க்யூட்டாக இருப்பதை பார்த்து ஒரு பக்கம் வழிந்தாலும், ஆரி கேட்ட கேள்விக்கு ஷிவானி என்ன பதில் சொல்லப் போகிறார், எப்படி பதில் சொல்லி வெற்றி பெற்று இருப்பார் என ஏகப்பட்ட குழப்பத்தில் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

காதல் கத்திரிக்காய்

காதல் கத்திரிக்காய்

"காதலும் இல்லை ஒரு கத்திரிக்காயும் இல்லை ஆரி!... எல்லாம் ஓட்டுக்காக மட்டும்!" என இந்த பிக் பாஸ் ரசிகர், ஆரி ஷிவானியிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். ஷிவானியிடம் இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துக் கொண்டு தப்பிக்கவே பாலா நடத்தும் டிராமா இது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

செத்தாலும் போனை வச்சிருக்கமாட்டா

செத்தாலும் போனை வச்சிருக்கமாட்டா

ஷிவானிக்கு ஆரி கூட போனில் பேசுவது ரொம்ப கஷ்டமான விஷயமாக இருந்தாலும், ஷிவானிக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இது. இதில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்றே ஷிவானி போராடுவாங்க என்றும், உச்சகட்டமாக சென்று செத்தாலும் ஷிவானி போனை வச்சிருக்க மாட்டா என கமெண்ட் அடித்துள்ளனர்.

சிக்கிய ஷிவானி

சிக்கிய ஷிவானி

"ஆரி கேட்ட முதல் கேள்விக்கு சிரிச்சிக்கிட்டே பதில் சொன்ன ஷிவானி.. ஆனால் கடைசி கேள்விக்கு ஷிவானி முகமே மாறிப்போச்சு!" என புரமோவில் ஷிவானி கடைசியாக கொடுக்கும் ரியாக்‌ஷனை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர். நிவர் புயல் மழையிலும் பிக் பாஸ் வீட்டில் சண்டை புயல் ஓயாமல் நல்லாவே எடிட்டர் ஒப்பேற்றி வருகிறார் என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

நீ தான் தைரியமான ஆளாச்சே

நீ தான் தைரியமான ஆளாச்சே

இரண்டாவது புரமோவில் பாலாவுக்கும் ஷிவானிக்கும் இடையே இருப்பது காதலா? அன்பா? என ட்விஸ்ட் வைத்து ஆரி கேட்ட நிலையில், ஷிவானி கொடுத்த ரியாக்‌ஷனை பார்த்த ரசிகர்கள், நீ தான் தைரியமான ஆளாச்சே சொல்லு ஷிவானி சொல்லு என பங்கம் பண்ணி வருகின்றனர். மேலும், சிலர் எப்படி இருந்தாலும் பொய் தான் சொல்லுவா எனவும் திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X