ஒரு மழை பெய்திடக் கூடாது.. உடனே கேமரா தூக்கிட்டு டான்ஸ் ஆடிடுவீங்க.. ஷிவானியை பங்கம் பண்ண ஃபேன்ஸ்!
சென்னை: பம்பர் படத்துக்கு பிறகு ஷிவானி நாராயணன் இன்னமும் தனது அடுத்த படத்தில் கமிட் ஆகாத நிலையில், தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்களாக போட்டு தனது ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.
அதே சமயம் வழக்கம் போல நெட்டிசன்கள் பலரும் ஷிவானியை பங்கமாக கலாய்த்து ட்ரோல் கமெண்ட்டுகளையும் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

திடீரென சென்னையில் பெய்த மழையில் அரை டவுசர் அணிந்துக் கொண்டு அனிருத் பாட்டுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்திருக்கிறார் ஷிவானி நாராயணன்.
பிக் பாஸ் பியூட்டி: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களிலேயே வெகு சில நடிகைகள் மட்டுமே ஏகப்பட்ட இளைஞர்களை தனது அழகால் மயக்கினர். ஓவியா, ரைசா வில்சன், லாஸ்லியா, யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா வரிசையில் சீசன் 4ல் கலந்து கொண்ட ஷிவானி நாராயணனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர்.

பிக் பாஸ் பியூட்டியான வலம் வந்த ஷிவானி நாராயணன் கோலிவுட்டில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார்.
பம்பர் ஹிட்: 8 தோட்டாக்கள் பட ஹீரோ வெற்றிக்கு ஜோடியாக சமீபத்தில் ஷிவானி நாராயணன் நடித்து வெளியான பம்பர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அந்த படத்துக்கு பிறகு அடுத்ததாக ஷிவானி நாராயணன் எந்த படத்தில் நடிக்கிறார் என்பதை தெரிந்துக் கொள்ள அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

ஆனால், இப்போதைக்கு ஷூட்டிங் ஏதும் இல்லை போலத் தெரிகிறது. ஷிவானி நாராயணன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்களையும் போட்டோக்களையும் பதிவிட்டு 3.6 மில்லியனில் இருந்து 3.7 மில்லியன் ரசிகர்களை வெகு சீக்கிரத்தில் ஈர்த்து விட்டார். கூடிய விரைவிலேயே 4 மில்லியன் இன்ஸ்டா ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றும் முயற்சியில் களமிறங்கி உள்ளார்.
மழையில் அப்படியொரு டான்ஸ்: சென்னையில் திடீரென வானிலை மாறி மழை பெய்த நிலையில், வெளியே வந்து குட்டையில் குதித்து ஷிவானி போட்ட டான்ஸ் வீடியோ அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.
மழையில் மயில் ஆடுவது போல ஷிவானி நடனமாடுகிறார் என்றும் எவ்ளோ க்யூட்ல ஷிவு என கொஞ்சி வருகின்றனர்.
பங்கம் பண்ண நெட்டிசன்கள்: அதே சமயம் கொஞ்சம் மழை பெய்ஞ்சிடக் கூடாது.. உடனே கேமராவ தூக்கிட்டு டான்ஸ் ஆடுறேன்னு குதிச்சிட்டு ரீல் போட வேண்டியது என ஷிவானியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இதுக்கு பேரு தான் உங்க ஊர்ல டான்ஸா இப்படியெல்லாம் ஆடினால், சினிமா வாய்ப்பு எப்படி ஷிவானி கிடைக்கும் என ரோஸ்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











