அர்ச்சனா அப்போ போட்ட விபூதி இன்னும் வேலை செய்யுது போல.. ரியோ அன்ட் சோமை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் பாலாவுக்கு ஆதரவாக ஆரியை டார்கெட் செய்யும் பாலாஜி மற்றும் சோமை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் கார்டன் ஏரியாவில் பேசும் ரியோவும் சோமும் பாலாஜியின் வீட்டில் இருந்து வந்து போன பிறகுதான் அவர் சண்டை போட ஆரம்பித்துவிட்டார் என கூறுகின்றனர்.

மேலும் அதற்கு பாலாஜி மட்டுமே காரணம் இல்லை என்றும் இங்குள்ள சில பேர் என்று ஆரியின் பெயரை சொல்லாமல் கூறுகிறார். ஆரம்பத்தில் இருந்தே ரியோவும் சோமும் ஆரிக்கு எதிராகவே பேசி வருகின்றனர்.

இரண்டாவது புரமோ

இரண்டாவது புரமோ

நேற்றைய வெல்குரோ காயின் டாஸ்க்கின் போதும் கூட ஆரியை ஓட விடாமல் தடைகளை ஏற்படுத்தினார். இதுகுறித்து ஆரி கேட்ட போது, அதையெல்லாம் தாண்டி நீங்கள் ஓட வேண்டியதுதானே என்றார். அப்போதே அவரை விளாசினர் நெட்டிசன்கள். இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ரியோ மற்றும் சோமை கழுவி ஊற்றி வருகின்றனர்.

அண்ணன் வந்து சென்றபிறகு

அண்ணன் வந்து சென்றபிறகு

இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சோம் சொல்றது கரெக்ட்தான், வெளியில இருந்து வந்தவங்க (பாலாஜியின் அண்ணன்) ஏத்திவிட்டுதான் பாலா இப்படி பண்ணுகிறார் என்று பதிவிட்டுள்ளார்.

மோசமான ஸ்ரேட்டஜி

மோசமான ஸ்ரேட்டஜி

பாடல் டாஸ்க்குல ஆரிக்கு பாட்டு தெரிஞ்சாதான பஸர் பிரஸ் பண்ணுவாரு.. அடுத்தவங்களுக்கு பாயிண்ட்ஸ் ஏறிட கூடாதுனு பாட்டு தெரியாமலே பஸர் பிரஸ் பண்ண பாலாவோட ஆரி எவ்ளோவோ மேல்.. கேபி இவ்ளோ குறைவான பாயிண்ட் வாங்கியதற்கு பாலாஜியின் மோசமான ஸ்ட்ரேட்டஜிதான் காரணம் என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஓவர் டைம் பார்க்குறாங்க

ஓவர் டைம் பார்க்குறாங்க

குரூப்பிஸமும் ஃபேவரிட்ஸமும் ஆரியின் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குக் எதிராக ஓவர் டைம் பார்த்து வருகிறது.
நீங்க உங்களுக்குள்ளயே விளையாடிக்கோங்க. ஆரிக்கு டிக்கெட் தேவையில்ல; நாங்க இருக்கோம்! என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

கரெக்ட்டா பேசியிருக்க..

கரெக்ட்டா பேசியிருக்க..

பாலாஜி வீட்டில் இருந்து வந்து போன பின்புதான் அவர் சண்டை போடுவதாக சோம் கூறியதை பார்த்த இந்த நெட்டிசன், சோமு.. இன்னைக்கு தான் கரெக்டா பேசிருக்க என பதிவிட்டுள்ளார்.

சோம் வேற லெவல்

சோம் வேற லெவல்

இரண்டாவது புரமோவில் சோம் மற்றும் ரியோ பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், இந்த இரண்டு லூசு என்ன தான் பேசுது தெரியலையே.. ஆண்டவா??? அதிலும் சோம் வேற லெவல்.. என மரண பங்கம் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

மீரா மிதுன் பாதி

மீரா மிதுன் பாதி

பிக்பாஸ் வீட்டில் பாலாஜி நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த இந்த நெட்டிசன், பாலாஜியை டுபாக்கூர் பாலா என்றும் "வனிதா பாதி மீராமிதுன் பாதி ரெண்டும் சேர்ந்த கலவை நான்" என பதிவிட்டுள்ளார்.

காலை தூக்கிய போது

காலை தூக்கிய போது

புரமோவில் ரியோ மற்றும் சோம் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஆரியை கோமாளி பாலா கேவலமா பேசிய போதும், காலைதூக்கி காண்பித்தபோதும் எவன்டா கேட்டீங்க!.. ரியோ சோம் இரண்டு பேருமே இன்றுவரை ஆயாவின் அடிமைகள்தான் என்பதில் சந்தேகமே இல்லை! என பதிவிட்டுள்ளார்.

உலக மகா யோக்கியர்கள்

உலக மகா யோக்கியர்கள்

இரண்டாவது புரமோவில் ரியோவும் சோமும் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், உலக மகா யோக்கியனுக நியாயத்தை பேசுறாங்க என இருவரையும் கழுவி ஊற்றியுள்ளார் இந்த நெட்டிசன்.

இந்த வாரம் புறணி..

இந்த வாரம் புறணி..

இந்த இரண்டு வாரம் ரியோ, சோம் கூடி பேசுறப்போ ஆரியை பத்தி புலம்பாம இருக்கிறது எத்தனை முறை?
என்னத்த புலம்பி என்ன ஆகப்போகுது? சோம் பர்ஃபெக்ட் சேஃப் கேம்.. தப்பா புரிஞ்சுக்கிட்டேனு போனவாரம் டிராமா? இந்த வாரம் புறணி.. என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

கீழ்த்தரமாக செய்யாதீங்க..

கீழ்த்தரமாக செய்யாதீங்க..

புரமோவில் சோமும் ரியோவும் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஓகே பிக்பாஸ் அண்ட் விஜய் டிவி ஆரி ரொம்ப கேட்டவர்தான் நாங்க நம்பிட்டோம். நீங்க கோமாளி ராஜா ரியோவுக்கு டைட்டில் கொடுங்க அதுக்காக ரொம்ப கீழ்த்தரமா செயல்படாதீங்க உங்க செயல்பாடு மக்களுக்கு கேவலமா தெரியுது 90 நாட்கள் நேர்மையா நல்லவனா இருந்த ஒருவன் டைட்டிளுக்கு10 நாட்களுக்கு முன்பு கெட்டவனாக சித்தரிக்கப்படுகிறான் என தெரிவித்துள்ளார்.

அர்ச்சனா போட்ட விபூதி

அர்ச்சனா போட்ட விபூதி

சோம் மற்றும் ரியோ பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா அப்போ போட்ட விபூதி இன்னும் வேலை செய்யுது போல இந்த மக்கு பசங்க ரெண்டு பேருக்கும்?? என்று மரண பங்கம் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X