சுச்சியை யாராவாது கிச்சுகிச்சு மூட்டுங்கப்பா.. உம்முன்னே இருக்கு.. மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் சுச்சியை பங்கம் செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ஹவுஸ்மெட்டுகளுக் வெடி கொடுக்கும் டாஸ்க்கை கொடுத்து பற்ற வைத்துள்ளார் கமல்.
இதனால் ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளர்களுக்கு தங்கள் மனதில் பட்ட வெடிகளை கொடுக்கின்றனர்.

சுச்சியின் ரியாக்ஷன்
அதன்படி, அனிதாவுக்கு சர வெடியும், ஷிவானிக்கு ஊசி வெடியும், சுச்சிக்கு பாம்பு மாத்திரையும் கொடுக்கப்படுகிறது. கமல் கொடுத்துள்ள இந்த டாஸ்க்கால் வரும் வாரங்களில் என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் புரமோவில் சுச்சியின் ரியாக்ஷன்களை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

ஆண்டவரே உட்காந்துட்டாரு
புரமோவில் கமல் சேரில் அமர்ந்து பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், இன்னைக்கி நிகழ்ச்சி சொல்லிக்கிறமாதிரி இல்லைனுதான் ஆண்டவரே அமைதியா உட்காந்துவிட்டாரு.. என்று கூறியுள்ளார்.

குரூப்பா வெடிக்கணும்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வான் வெடின்னு புதுசா வந்துயிருக்காம்!... அது எல்லோரும் குரூப்பா வெடிச்சாத்தான் வெடிக்குமாம்.. என கலாய்த்துள்ளார்.

சுசித்ரா கையில் போகணும்..
மற்றொரு நெட்டிசனான இவர். என்னடா இது பாம்பு மாத்திரைக்கு வந்த சோதனை.. இப்படியா சுசித்திரா கையில போகணும்.. என கிண்டலடித்துள்ளார்.

உம்முன்னே இருக்கு..
புரமோவில் சுச்சியின் ரியாக்ஷன்களை பார்த்த இத்ந நெட்டிசன், சுச்சியை யாராவாது கிச்சுக்கிச்சு மூட்டுங்கப்பா!... உம்முன்னே இருக்கு என கலாய்த்துள்ளார்.

ரமேஷ் என்ன பண்றாரு..
அடுத்த வாரம் இந்த ரியோ குருப் அர்சனா , நிஷா , ரமேஷ்
அப்புறம் பாலா கேங் சம்யுக்தா இவங்க 5 பேரும் அனிதாவ எலிமினேசன்க்கு நாமினேட் பண்ணுவாங்க. ரமேஷ் அப்படி என்ன தான் பண்ணுறார் ஒருத்தரும் அவர நாமினேட் பண்ண மாட்றாங்க என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

டோட்டல் வேஸ்ட்
எல்லோரும் புஸ்வானம் தான். டோட்டல் வேஸ்ட். 3 சீசனை பார்த்து விட்டு ஆளாளுக்கு நல்லவங்க மாதிரி நடிக்கிறாங்க. அதுலயும் அந்த மாய கிழவி சுஜி ட்ரெஸ் சகிக்கல.. என விளாசியுள்ளார்.

இது புதுசா இருக்கே..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சுச்சி பாம்பு மாத்திரை.. இது புதுசா இருக்கே என கூறியுள்ளார்.

நம்பாதீங்க..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், உள்ளே போன ஒன்னும் இருக்காது..... புரமோவுல காட்டுரத நம்பாதீங்க என கூறியுள்ளார்.

தொட்டா சிணுங்கி அனிதா
ஆ ஊ னா உடனே கண்ணுல தண்ணி வந்துரும்..
தொட்டா சிணுங்கி அனிதா.. என கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











