த்ரிஷா பாவமில்லையா?.. முத்தமழை பாட்டுக்கு ஆட்டம் போடும் வடிவேலுவின் வீடியோ.. அநியாயம் பண்றீங்களேப்பா
சென்னை: இணையதளவாசிகள் எப்போதும் எக்ஸ்ட்ரீம் ஸ்டேஜில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருப்பார்கள் போல, ஒரு சம்பவம் நடந்து விட்டால் அதை அலசி ஆராய்வதில் எந்த அளவுக்கு கவனமாக இருக்கிறார்களோ அதே அளவுக்கு, அவர்களிடத்தில் ட்ரோல் மெட்டீரியலாக ஏதாவது கிடைத்துவிட்டால், முடுச்சு விட்டீங்க போங்க என கூறுவது போல நார் நாராக கிழித்து தொங்க விட்டு விடுவார்கள். அப்படியான ஒரு மெட்டிரியலாகத்தான் முத்தமழை பாடல் அமைந்துள்ளது.
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் பாடகி சின்மயி பாடிய முத்த மழை பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரும் இணையத்தில் பாடலையும் பாடலைப் பாடிய சின்மயியையும் கொண்டாடினார்கள். பாடலுக்கு படக்குழு எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பு கிடைத்தது. மேலும் ரசிகர்கள் படக்குழு வெளியிட்டுள்ள பாடல்கள் பட்டியலில் பாடகி தீ பாடிய வெர்ஷன் தான் உள்ளது. படக்குழு சின்மயி வெர்ஷனை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஒரு கட்டத்தில் சின்மயி குரலில் உள்ள பாடல் நன்றாக உள்ளது தீ குரலில் உள்ள பாடல் நன்றாக உள்ளது என ரசிகர்களுக்கு இடையில் போட்டியே ஏற்பட்டது.
இந்த சர்ச்சையை முடித்து வைக்க வீடியோ வெளியிட்ட சின்மயி, நான் பாடிய பாடலுக்கு இவ்வளவு வரவேற்பு கொடுத்ததற்கு நன்றிகள். ஆனால் தீ என்னை விட 100 மடங்கு சிறந்த பாடகி என்றெல்லாம் பாராட்டி பேசியிருந்தார். படத்தில் இந்த பாடல் யாருக்கு? படத்தின் முதல் பாதியில் இடம் பெற்றுள்ளதா அல்லது இரண்டாவது பாதியில் இடம் பெற்றுள்ளதா என்ற கேள்வி இருந்தது.

ரசிகர்கள் ஏமாற்றம்: ஆனால் ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புக்கு இயக்குநர் மணிரத்னம் பெரிய ஏமாற்றத்தை பரிசாகக் கொடுத்தார். அதாவது, படத்தில் இந்த பாடல் இடம் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் அப்செட் ஆனார்கள். இது மட்டுமல்லாமல், படமே ரசிகர்கள் மத்தியில் பெரும் மோசமான விமர்சனத்தைப் பெற்றதால், இந்த பாடலையாவது படத்தில் வைத்திருக்கலாம் என விமர்சித்தார்கள். இது மட்டுமல்லாமல் மற்ற பாடல்களும் படத்தில் முழுவதுமாக இல்லை. இதுவும் விமர்சனத்திற்கு ஆளானது.
த்ரிஷா பாவம்: இந்நிலையில் படக்குழு முத்த மழை பாடலை தனி வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த பாடலின் வீடியோ வெர்ஷனைப் பார்த்த இணையதள வாசிகள் பாடலை சகட்டுக்கு ட்ரோல் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஒரு கட்டத்தில் நல்ல வேளை இந்த பாடலை படத்தில் வைக்கவில்லை என்று விமர்சித்து வருகிறார்கள். மேலும் த்ரிஷாவை போட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள்.
வடிவேலு: இந்நிலையில் வடிவேலுவின் புகழ் பெற்ற காமெடியான என் அப்பா ஒரு ட்ரம்ஸ் பிளேயர்.. அப்பா வாசிக்க, அம்மா ஆட, நானும் என் அண்ணனும் உட்கார்ந்து பார்க்க ஒரே கூத்தா இருக்கும்" என்ற காமெடியின் வீடியோவை போட்டு இணைத்து பாடலை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். இதனைப் பார்த்த த்ரிஷாவின் ரசிகர்களும் இணையவாசிகளும், த்ரிஷா பாவம்டா என கமெண்ட் அடித்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











