டி.ஆர் கட்சியால் தமிழக மக்களுக்கு உண்டாகும் நன்மை... கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
Recommended Video

சென்னை: நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் இன்று மீண்டும் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார் . இன்று அவரது 'லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்' என்ற கட்சிப்பலகையை திறந்து வைத்திருக்கிறார்.
டி.ராஜேந்தர் இன்று ஒரு முக்கிய முடிவை அறிவிக்க போவதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி, அவர் இன்று மீண்டும் அரசியலில் காலடி பதித்துள்ளார்.
அவர் ஏற்கெனவே ஆரம்பித்த 'இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம்' கட்சியின் பெயர் பலகையை திறந்து வைத்தார். இதன்மூலம் அவர் மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ளார். கட்சியின் பெயர் பலகையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைபடங்கள் இடம்பெற்றுள்ளது.

கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
டி.ராஜேந்தர் அதிரடியாக அறிவிப்பு வெளியாகும் எனக் கூறிவிட்டு உப்புசப்பில்லாத அரசியல் ரீ-என்ட்ரியை அறிவித்துள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சிம்புவின் அரசியல் பிரவேசம் பற்றியும் டி.ஆர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மரு வெச்சா போதும்
டி.ஆர் கட்சி பரிதாபங்கள். மாறுவேசம் போடணும்னா மரு வெச்சா போதும்னு சொல்லிக்கொடுத்திருக்கே தமிழ் சினிமா!
அறிவிப்பு எங்கப்பா
டி.ராஜேந்தர் இன்று பத்திரிகையாளர்களை அழைத்து, வெளியிட்ட அறிவிப்பு இப்படித்தான் இருக்கிறதாம்.
எங்க தல எங்க தல டி.ஆரு
இதிமுகவால தமிழகத்துக்கு ஒரே ஒரு நன்மைதான். இனி தமிழிசை அக்காவுக்கு எதுகை, மோனையில் பதில் சொல்லியே TR சாவடிப்பார் #எங்க தல..எங்க தல..டி.ஆரு
டி.ஆர் ராக்ஸ்!
லட்சிய திமுக இலட்சிய திமுக ஆனதைப்போல ஒரு பரபரப்பான திருப்பம் இந்த நூற்றாண்டில் வேறு ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை! டிஆர் ராக்ஸ்!
எப்படி ஆட்டோ ஓடும்?
கண்ணாடிய திருப்புனா எப்படி சந்துரு ஆட்டோ ஓடும்..? #லதிமுக #இதிமுக #டிஆர்
புது வீடு மாதிரி
பழைய வீட்ட மறுபடி பெயின்ட் அடிச்சி புது வீடுனு நம்பிகிட்டு குடிபோறதில்லையா அதை தான்யா நானும் பன்றேன் - டி.ஆர்
அலட்சிய தி.மு.க
லட்சிய திமுக பெயரை இலட்சிய திமுக-வா TR மாத்தியிருக்காரு.#இதிமுக . அலட்சிய திமுகன்னு வெச்சிருக்கலாம். அப்பாவும் அலட்சியமா கட்சிய நடத்தறாரு; பையனும் அலட்சியமா பாத்ரூம்ல இருந்தே டப்பிங் பண்ணுவாரு. #matching


Click it and Unblock the Notifications











