சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம் ஜூவல்லரி.. சந்தானம் மாதிரி இருக்கீங்க.. வனிதாவை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: வனிதா ஷேர் செய்துள்ள கிறிஸ்துமஸ் மேக்கப் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மரண பங்கம் செய்துள்ளனர்.
இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் வனிதா. ஏற்கனவே இரண்டு திருமணம் செய்த வனிதா, கடந்த ஜூன் மாதம் 3வது திருமணம் செய்தார்.
தனது யூட்யூப் சேனலில் விஷ்வல் எடிட்டராக பணிபுரிந்த பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தால் அவரது முதல் மனைவி தனது கணவர் தனக்கு வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

பெரும் சர்ச்சை
இதனால் வனிதாவின் திருமண விவகாரம் பெரும் சர்ச்சையானது. இருவரும் சேர்ந்து பேட்டியளிப்பது, நெருக்கமான போட்டோக்களை ஷேர் செய்வது என இருந்து வந்தனர். இதனை பார்த்து ரசிகர்கள் கண்டபடி விளாசினர்.

பீட்டரை விரட்டிய வனிதா
பீட்டர் பாலுக்காக பல திரைத்துறை பிரபலங்களை பகைத்துக் கொண்டார் வனிதா. ஆனால் பீட்டர் பாலோ மீண்டும் குடிக்கும் புகைக்கும் அடிமையானார். இதனால் நொந்துபோன வனிதா அவரை வீட்டை விட்டே விரட்டியடித்தார்.

பேக் டூ ஃபார்ம்
மேலும் தானும் பீட்டர் பாலும் பிரிந்துவிட்டதாகவும் கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டார். அதன்பிறகு ஓரிரு நாட்களிலேயே பேக் டூ ஃபார்ம் ஆன வனிதா, தொடர்ந்து யூட்யூபில் சமையல் நிகழ்ச்சி கலக்கப்போவது யார் என பிஸியாக இருந்து வருகிறார்.

கிறிஸ்துமஸ் மேக்கப்
இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு வனிதா, தனது யூட்யூப் சேனலில் கிறிஸ்துமஸ் மேக்கப் குறித்த வீடியோவை ஷேர் செய்தார். மேலும் தனது கிறிஸ்துமஸ் போட்டோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்தார்.

ஹாலோவின் மேக்கப்
அதில் மின்னும் லிப்ஸ்டிக், கண் புருவத்தில் கலர், ஐலேஷில் கல, மின்னும் காஜல், மின்னும் ஐலேஷ் என பயமுறுத்தும் வகையில் மேக்கப் போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஹாலோவின் மேக்கப் மாதிரி இருக்கு என்றும் பயமா இருக்கு என்றும் பங்கம் செய்துள்ளனர்.

சொக்கத்தங்கம் ஜூவல்லரி
இன்னும் சிலர் இந்த மேக்கப்பை பார்க்கும் போது சந்தானத்தின் சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம் ஜூவல்லரி சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜூவல்லரி காமெடிதான் நினைவுக்கு வருகிறது என்று பங்கம் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











