அன்போடு அண்ணன் அருண்விஜய்க்கு வாழ்த்து சொன்ன வனிதா அக்கா.. மண்ணா கூட மதிக்கலையே!

சென்னை: நடிகை வனிதா தனது அண்ணான அருண்விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

மூத்த நடிகர் விஜயக்குமாரின் மகன் அருண் விஜய். முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமனார்.

தொடர்ந்து பிரியம், காத்திருந்த காதல், கங்கா கவுரி என பல படங்களில் நடித்துள்ளார்.

பல ஆண்டுகளாக போராட்டம்

பல ஆண்டுகளாக போராட்டம்

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற போராடி வரும் அவருக்கு பாண்டவர் பூமி, இயற்கை உள்ளிட்ட படங்கள் பெயர் சொல்லும் படியாக இருந்தது.

மூன்று படங்கள்

மூன்று படங்கள்

தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான தடம் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அருண் விஜய். தற்போது அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அருண் விஜய் பிறந்தநாள்

அருண் விஜய் பிறந்தநாள்

அருண் விஜய் நடிகை வனிதா விஜயக்குமாரின் சகோதரராவார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார் அருண் விஜய். இதனை முன்னிட்டு அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

டிவிட்டரில் வாழ்த்து

டிவிட்டரில் வாழ்த்து

அந்த வகையில் நடிகை வனிதா விஜயக்குமாரும் அருண் விஜய்யிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா அருண்விஜய். கடவுள் உன்னை தகுதியுள்ள எல்லாவற்றையும் கொண்டு ஆசீர்வதிப்பார்.

சொத்து பிரச்சனையில்

சொத்து பிரச்சனையில்

உங்களைப் போலவே பலமாக இருங்கள்.. நாம் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறோம்.. என பதிவிட்டிருந்தார். ஏற்கனவே சொத்துப் பிரச்சனையில் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் வரை இழுத்த வனிதாவை அவரது குடும்பத்தினர் ஓரங்கட்டியுள்ளனர்.

பப்ளிசிட்டி ஸ்டன்ட்

பப்ளிசிட்டி ஸ்டன்ட்

இந்நிலையில் வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், வனிதாவை வச்சு செய்துள்ளனர். அருண் விஜய் நீங்கள் இருக்கும் பக்கம் கூட திரும்ப மாட்டார். என்ன ஒரு அவமானம். பப்ளிசிட்டி ஸ்டன்ட் விஷ் என கழுவி ஊற்றியுள்ளார் இந்த நெட்டிசன்.

மொத்த குடும்பம்

மொத்த குடும்பம்

வனிதாவின் வாழ்த்து பதிவை பார்த்த இந்த நெட்டிசன், அருண் விஜய் அண்ணா உங்களை கை கழுவி ரொம்ப நாள் ஆகுது. மொத்த குடும்பமும் உங்களிடம் இருந்து தப்பித்து விட்டார்கள் என கூறியுள்ளார்.

அந்த மனசு இருக்கே

அந்த மனசு இருக்கே

மற்றொரு நெட்டிசனான இவர், இந்த விஷ் படிக்கும் போது மனசுக்குள்ள அன்பே சிவம் படத்துல கமல் சார் டயலாக் தான் வருது. வனிதா அக்காவுக்கு இத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், விஷ் பண்ற அந்த மனசு இருக்கே அதுதான் கடவுள்.. லவ் யூ என வனிதாவை புகழ்ந்துள்ளார்.

இப்டி பண்றீங்களேம்மா..

இப்டி பண்றீங்களேம்மா..

நடிகை வனிதா விஜயக்குமார் மாலை நேரத்தில் அருண் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியதை பார்த்த இந்த நெட்டிசன், அண்ணா பிறந்தநாளுக்கு ஈவ்னிங்தான் டிவிட்டா.. என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா என கிண்டலடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X