அவதாருக்கு அத்தைப் பொண்ணு மாதிரி இருக்கு.. வனிதா ஷேர் செய்த போட்டோ.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி பங்கம் பண்ணியுள்ளனர்.

நடிகை வனிதா விஜயகுமார் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.

திருமணங்கள், விவாகரத்து, குடும்பப் பிரச்சனை, சொத்துப் பிரச்சனை என பல சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் அடிபட்டு வருகிறார்.

சண்டைக்கோழி

சண்டைக்கோழி

குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார் வனிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சக போட்டியாளர்களுடன் சண்டை போட்டு பெயரை டேமேஜ் செய்து கொண்டார் வனிதா.

யூட்யூப் சேனல்

யூட்யூப் சேனல்

அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னரானார். அதன் பிறகு யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கிய வனிதா அதன் விஷுவல் எடிட்டராக தன்னிடம் பணியாற்றிய பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துக்கொண்டார்.

Recommended Video

BB Jodigal Showல Vanithaகு ஜோடியாகும் Pugazh | Bigg Boss, Vanitha Vijaykumar
லெஃப்ட் அன்ட் ரைட்

லெஃப்ட் அன்ட் ரைட்

ஆனால் அந்த திருமணம் சர்ச்சையானது. பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத், வனிதா தனது கணவரை அபகரித்து கொண்டதாக போலீஸில் புகார் அளித்ததால் வனிதா திருமணம் பேசு பொருளானது. தனது மூன்றாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்தவர்களை சமூக வலைதளங்களில் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கினார் வனிதா.

முறிந்த திருமணம்

முறிந்த திருமணம்

ஆனால் அந்த திருமணமும் முறிந்தது. 4 மாதங்களில் பீட்டர் பாலை பிரிந்த வனிதா. படங்களில் நடிக்க தொடங்கினார். சின்னத்திரை சினிமா என கலக்கி வருகிறார்.

சுரேஷ் சக்கரவர்த்தி ஜோடி

சுரேஷ் சக்கரவர்த்தி ஜோடி

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற வனிதா தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதில் வனிதாவுக்கு ஜோடியாக சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளார்.

ஷேர் செய்யப்படும் போட்டோஸ்

ஷேர் செய்யப்படும் போட்டோஸ்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள வனிதா தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

கெட்டப்பே வேண்டாமே

அதன்படி தற்போது காளி கெட்டப்பில் அவர் ஷேர் செய்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கன்னாபின்னாவென கலாய்த்துள்ளனர். வனிதா ஷேர் செய்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், உங்களுக்கு கெட்டப்பே வேண்டாமே ஏற்கனவே காளிதானே என பதிவிட்டுள்ளார்.

பயந்து வருது

மற்றொரு நெட்டிசனான இவர், காளி எப்போ ட்ரெஸ் போட்டிருக்குன்னு கேட்கலாம்.. வாயக் கொடுத்தா ஒரிஜினல் காளி வெளிய வருமேன்னு பயந்து வருது என பதிவிட்டுள்ளார்.

அவதாருக்கு அத்தை பொண்ணு

வனிதாவின் கெட்டப்பை பார்த்த இந்த நெட்டிசன், அவதார்க்கு அத்த பொண்ணு மாதிரி இருக்கு என மரண கலாய் கலாய்த்துள்ளார். மற்றொரு நெட்டிசன் பேய் மாதிரி இருக்கு என கிமெண்ட் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X