இதெல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே...பீஸ்ட் டிரைலரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

சென்னை : விஜய் படத்தின் பீஸ்ட் டிரைலரை ஒரு பக்கம் அவரின் ரசிகர்கள் ஆஹா...ஓஹோ என புகழ்ந்து வரும் நிலையில், மற்றொரு புறம் அதை வைத்து செமயாக கிண்டல் செய்து வருகிறார்கள்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாகிறது. உலகம் முழுக்க இந்த படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது. பீஸ்ட் ரிலீசை திருவிழாவாக கொண்டாட ரசிகர்களும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

 பீஸ்ட் டிரைலர் சாதனை

பீஸ்ட் டிரைலர் சாதனை

பீஸ்ட் ரிலீஸ் நெருங்கும் நிலையில் இன்று படத்தின் டிரைலரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதிரடியாக விஜய் மாஸ் காட்டும் இந்த டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இரண்டு நிமிடம் 57 விநாடிகள் கொண்ட பீஸ்ட் டிரைலர் வெளியான 5 நிமிடத்திலேயே 1 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை ஆஹா, ஓஹோ என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

செம காப்பிப்பா

செம காப்பிப்பா

இந்நிலையில் பீஸ்ட் டிரைலர் வெளியான 5 நிமிடத்திலேயே அந்த படம் பற்றிய பெரிய அளவில் ஆராய்ச்சி நடத்தி, கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள். ஹாலிவுட், கோலிவுட் என பல படங்களின் மிக்சிங்காக இந்த டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளதாக பீஸ்ட் டிரைலரை அக்குவேர் ஆணி வேராக பிரித்து மேய்ந்து, வச்சு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். இதை பார்த்த மற்றவர்களும், அட இதில் இவ்வளவு இருக்கா என மற்றவர்களும் கேட்டு வருகிறார்கள்.

இத்தனை படங்களின் மிக்சிங்கா

இத்தனை படங்களின் மிக்சிங்கா

பீஸ்ட் டிரைலரில் மாலில் பிணைக்கைதிகளாக மக்களை தீவிரவாதிகள் பிடித்து வைத்திருக்கும் காட்சிகள் யோகிபாபு லீட் ரோலில் நடித்த கூர்கா படத்தை பார்ப்பது போலவே இருக்கு. இதே போல், துப்பாக்கி குண்டுகளை பெரிய இரும்பு கேடயம் வைத்து மறைத்தபடி விஜய் சண்டை போடுவது, விக்ரம் படத்தின் டீசரில் கமல் வருவதை போலவே உள்ளது. மேலும் சுரங்கம் போன்ற காட்சிகள் பார்க்கும் போது மணி ஹெய்ஸ்ட் சீரிசை நினைபடுத்துகிறது.

 அட ஆமாம்ப்பா... இதையும் கவனிக்கலியே

அட ஆமாம்ப்பா... இதையும் கவனிக்கலியே

மணிஹெய்ஸ்ட், கூர்கா படங்களை நினைவுபடுத்தும் பீஸ்ட் டிரைலரில் ஹெல்மெட் போடாமல் விஜய் ஜெட் போடுவதையும், தீவிரவாதிகளை கொல்வதையும் பயங்கரவாக நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகிறார்கள். டிரைலரிலேயே மொழத்த கதையையும் கூறி விட்டார்களே என சில சொல்லி வருவதற்கும், படத்தில் கதையே இல்லப்பா. அது தான் உண்மை என நெட்டிசன்கள் கவுண்ட்டர் கொடுத்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X