திட்டம் போட்டு விசில் சின்னத்தை வாங்கிய விஜய்.. கமல் பாட்டை போட்டு பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கி அறிவித்துள்ளது. இது தமிழக வெற்றிக் கழகம் எதிர் கொள்ளும் முதல் தேர்தல் என்பதால், இந்த கட்சி போட்டியிடாத மற்ற தொகுதிகளிலும் விசில் சின்னத்தை சுயேட்சையாக போட்டியிடுபவர்களுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தவெகவுடன் மாற்றுக் கட்சியினர் கூட்டணி வைக்கும் போது, அக்கட்சியினர் அந்த கட்சிக்கான சின்னத்தில் போட்டியிடும் போது, அந்த தொகுதியில், விசில் சின்னம் சுயேட்சை வேட்பாளருக்கு வழங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

இப்படி இருக்கையில் விஜய் ரசிகர்கள் பலரும் விசில் சின்னத்தை மனதில் வைத்து விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே திட்டம் தீட்டி வந்துள்ளார் என்றும் அதை சரியாக இம்பிளிமெண்ட் செய்து வருகிறார் என்றும் பாராட்டி வருகிறார்கள்.

Netizens Trolls Vijay TVK Election Symbol Whistle With Kamal Haasan Old Song Visiladichan Kunjugala

விசில்: அதாவது, "விஜய் நடித்த படம் பிகில். அவர் நடித்த கோட் படத்தில் விசில் போடு என்ற பாடலுக்கு நடனமும் ஆடி உள்ளார். தற்போது தனது கட்சிக்கு விசில் சின்னத்தை கேட்டுப் பெற்றுள்ளார். இவை எல்லாம் விஜயின் முந்தைய திட்டம் போலத் தெரிகிறது. விஜய் தனது திட்டத்தை சரியாக செயல்படுத்தி வருகிறார் என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சிலர் போக்கிரி படத்தில் விஜய் அசினுக்கு விசில் அடிக்க சொல்லிக் கொடுக்கும் காட்சியையும், சிலர் லியோ படத்தில் விஜய் விசில் அடிக்கும் காட்சியையும் பகிர்ந்து வருகிறார்கள்.

கமல்ஹாசன் பாடல்: விஜய் ரசிகர்கள் இப்படி ஃபயர் விட்டு வர, இணையவாசிகள் பலரும் விசில் சின்னத்தை ட்ரோல் செய்து வருகிறார்கள். குறிப்பாக கடந்த 1970 ஆம் ஆண்டு வெளியான படமான, மாணவன் படத்தில் இடம் பெற்ற விசிலடிச்சான் குஞ்சுகளா என்ற பாடலைப் பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக ஒரு இணையதளவாசி, அந்த பாடலைப் பகிர்ந்து, இன்னுமா இந்த வீடியோ டிரெண்ட் ஆகாமல் இருக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த படத்தில் ஜெய்சங்கர் கதாநாயகன் என்றாலும் இந்த பாடலில் கமல்ஹாசன் நடனமாடுவார். இந்த பாடலைப் பார்த்த இணைய வாசி ஒருவர், " சுச்சுவேஷன் சாங். மிகவும் பொருத்தமாக உள்ளது" என்றும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X