Vijay: எதே.. வெஜ் மட்டன் பிரியாணி.. சைவ மீன் குழம்பா?.. தவெக பொதுக்குழு மெனுவால் ரசிகர்கள் ஷாக்!

சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் அவரது கட்சி நடவடிக்கைகள் எந்த அளவிற்கு கவனிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு அவரது கட்சி நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவு குறித்தும் கவனம் எழுகிறது. காரணம் தனது கட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும் நிர்வாகிகளுக்கு அறுசுவை உணவு கொடுப்பதில் விஜய் மிகவும் கவனமாக இருக்கிறார். இப்படியான நிலையில் இன்று அதாவது மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு மதிய உணவில், பரிமாறப்படவுள்ள உணவுகள் குறித்த மெனு பட்டியல் ரசிகர்களை மட்டும் இல்லாமல், இணையவாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதற்கு முன்னர், சட்டமன்ற அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும், கல்வி உதவித் தொகையும் வழங்கினார். இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர்களுடன் வரவழைத்து பாராட்டினார். மேலும் வந்தவர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு என இரண்டுமே தடபுடலாக தயார் செய்யப்பட்டு பரிமாறப்பட்டது.

Netizens Trolls Vijay TVK Party Meeting Lunch Menu Veg Mutton Briyani And Veg Fish Curry

இந்த முதல் நிகழ்ச்சியில் இருந்து தான் விஜய் நடத்தும் நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவுகள் குறித்து கவனம் இணையவாசிகள் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது. இப்படி இருக்கும்போது, விஜய் கட்சி தொடங்கிய பின்னர், அவரது கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பரிமாறப்படும் உணவுகள் கவனம் பெற்று வருகிறது.

Netizens Trolls Vijay TVK Party Meeting Lunch Menu Veg Mutton Briyani And Veg Fish Curry

மெனு: இப்படி இருக்கும்போது, விஜய் மீது, அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவுகள் குறித்து விமர்சனம் முன் வைக்கப்பட்டது. அதாவது, விஜய் எப்போதும் சைவ உணவுகளை நிர்வாகிகளுக்கு வழங்குகிறார். ஏன் அசைவ உணவுகளை விஜய் பரிந்துரைப்பதில்லை என்றும் கேள்விகள் எழுந்தது. இப்படி கேள்வி கேட்டவர்களுக்கு விஜய்யை கலாய்க்க , விஜய் தரப்பில் இருந்தே ஒரு கண்டெண்ட் கொடுத்துள்ளார்கள் என்றால், அது இன்றைக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பரிமாறப்படும் உணவுகள் குறித்த மெனுதான்.

Netizens Trolls Vijay TVK Party Meeting Lunch Menu Veg Mutton Briyani And Veg Fish Curry

சைவமா அசைவமா? : அதாவது, இன்றைய பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு மதிய உணவாக மொத்தம் 21 வகையான உணவுகள் பரிமாறப்பட உள்ளது. இவை அனைத்தும் சைவ உணவுகள் தான். ஆனால் அதில் இரண்டு உணவுகளின் பெயர் மட்டும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது வெஜ் மட்டன் பிரியாணி மற்றும் சைவ மீன் குழம்பு என்ற பெயர்கள் தான் அது.

Netizens Trolls Vijay TVK Party Meeting Lunch Menu Veg Mutton Briyani And Veg Fish Curry

ஷாக்: 21 வகையான உணவுகள் குறித்த மெனுவில் இதைப் பார்த்த ரசிகர்களுக்கும் இணைய வாசிகளுக்கும் ஷாக் ஏற்படவில்லை என்றால் தான் ஷாக். இந்த விஷயத்தை தெரிந்து கொண்டவர்கள் விஜய்யை கலாய்த்து வருகிறார்கள். ஒன்று மட்டன் பிரியாணி போடுங்கள், இல்லை வெஜ் பிரியாணி போடுங்கள். அது என்ன? வெஜ் மட்டன் பிரியாணி என கேள்வி எழுப்பி விஜய்யை கலாய்த்து வருகிறார்கள். அதேபோல் சைவ குழம்பு என குறிப்பிடுங்கள் இல்லையென்றால் மீன் குழம்பு என குறிப்பிடுங்கள் அது என்ன சைவ மீன் குழம்பு என இரண்டையும் கலந்து கட்டி அடிக்கிறீர்கள் என விஜய்யை தரமாக கலாய்த்து வருகிறார்கள். ப்ளூ சட்டை மாறன் விஜய்யை பங்கமாக கலாய்த்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X