புர்ஜ் கலிஃபாவையே 6 வருஷத்துல கட்டிட்டாங்க.. உதயநிதி கொடுத்த உதவித்தொகை.. விஷாலை கலாய்க்கும் ஃபேன்ஸ்

சென்னை: நடிகர் சங்கத்தில் சேர்ந்ததில் இருந்தே நடிகர் சங்க கட்டடம் கட்டுவது பற்றி தொடர்ந்து நடிகர் விஷால் பேசி வருகிறார். சமீபத்தில், விஜயகாந்த் உயிரிழந்த நிலையில், அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய விஷால் கண்டிப்பாக நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் சாமி பெயரை தான் வைப்பேன் என அறிவித்து இருந்தார். கருணாநிதி, எம்ஜிஆர் என பலர் இருக்கும் போது விஜயகாந்த் பெயரை வைப்பது சாத்தியமில்லை என்றும் கூறுகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடத்தை தியாகராய நகரில் கட்டி வருகின்றனர். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக அந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன. இந்நிலையில், அந்த கட்டடம் கட்ட உதயநிதி ஸ்டாலின் இன்று நடிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளார். அதற்கு விஷால் நன்றி தெரிவித்த நிலையில், அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் ட்ரோல் செய்யத் தொடங்கி விட்டனர்.

Netizens trolls Vishal after Udhayanidhi gives 1 crore rupees for Nadigar Sangam building

ஒரு கோடி கொடுத்த உதயநிதி: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடத்தை கட்ட விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை நடிகர் சங்க நிர்வாகியான கார்த்தியிடம் வழங்கிய புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. நடிகர் சங்க தலைவர் நாசர், விஷால், கருணாஸ் உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த பெரிய தொகையை பெற்றுக் கொண்டனர்.

விஷால் நன்றி: நண்பர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இப்போ விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் அன்பிற்குரிய உதயா இப்படியொரு உதவியை நடிகர் சங்கத்துக்கு செய்திருப்பதை என்றுமே நாங்கள் மறக்க மாட்டோம். அந்த கட்டடத்தை விரைவில் கட்டி முடிக்க நீங்கள் காட்டும் ஆர்வத்தையும் மறக்க மாட்டோம் என நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Netizens trolls Vishal after Udhayanidhi gives 1 crore rupees for Nadigar Sangam building

கலாய்க்கும் ரசிகர்கள்: நடிகர் விஷால் பல ஆண்டுகளாக நடிகர் சங்க கட்டடத்தை கட்டுவோம் என சொல்லிக் கொண்டே இருக்கிறாரே தவிர இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் கட்டவில்லையே ஏன் எனக் கேட்டு ஏகப்பட்ட மீம்களை போட்டு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Netizens trolls Vishal after Udhayanidhi gives 1 crore rupees for Nadigar Sangam building

எப்போதான் ரெடியாகும்: எப்போதானே அந்த பில்டிங் ரெடியாகும் என மாஸ்டர் குட்டி பவானியின் போட்டோவை போட்டும் கேலி செய்து வருகின்றனர். விஷால் அந்த கட்டடத்தை கட்டப் போகிறேன் என சொல்லி 10 வருஷத்துக்கும் மேல் ஆகி விட்டதாகவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Netizens trolls Vishal after Udhayanidhi gives 1 crore rupees for Nadigar Sangam building

புர்ஜ் கலிஃபாவே: உலகின் உயரமான கட்டடமாக கருதப்படும் புர்ஜ் கலிஃபாவையே 6 வருஷத்துல கட்டி முடிச்சிட்டாங்க, நீங்க 10 வருஷமா நடிகர் சங்கத்தை கட்டிட்டு இருக்கீங்களா என்றும் நடிகர் சங்கத்தை கட்டுறேன், அங்கேயே கல்யாணம் கட்டுறேன் என விஷால் சொல்லி இத்தனை வருஷமாகியும் இரண்டுமே நடக்கலையே என வேறலெவலில் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

Netizens trolls Vishal after Udhayanidhi gives 1 crore rupees for Nadigar Sangam building

விஜய்க்கு ஓட்டு போடுவீங்களா?: நடிகர் விஷால் ட்வீட்டுக்கு கீழ் விஜய்க்கு சினிமாக்காரர்கள் ஓட்டுப் போடுவார்களா? அல்லது ஒரு கோடி கொடுத்த திமுகவுக்கு ஓட்டுப் போடுவாங்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X