Leo: கார்த்தி, கமலுக்கு பெரிய பெரிய துப்பாக்கி.. விஜய்ன்னு வந்துட்டா மட்டும் வில்லு, கத்தி?
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்க்கு மட்டும் ஏன் பெரிய துப்பாக்கியை கொடுக்கவில்லை என சில நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியிருந்தார். கைதி திரைப்படத்தின் கிளைமாக்ஸில் அத்தனை பெரிய மெஷின் கண்ணை தூக்கிக்கொண்டு எதிரிகளை துவம்சம் செய்திருப்பார்.

மாஸ்டர் படத்தில் வில்லு: அதன் பின்னர் விஜயின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியின் போது காரில் இருந்தபடி நடிகர் விஜய் வில்லையும் அம்பையும் கொண்டு அத்தனை லாரிகளையும் பறக்கவிடும் காட்சிகள் கொஞ்சம் கூட ஒட்டாத நிலையில் தான் அந்த படம் பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கவில்லை.

கார்த்தி கமலுக்கு பெரிய துப்பாக்கி: கடைசியாக கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் உலகநாயகன் போரில் பயன்படுத்தும் பீரங்கியை எடுத்து வந்து எதிரிகளை கதிகலங்க வைத்திருப்பார்.
இந்நிலையில், லியோ படத்தின் கிளைமாக்ஸில் நடிகர் விஜய் பிளடி ஸ்வீட் என அந்த கத்தியை வைத்து தான் சண்டை போடப் போகிறாரா என்கிற கேள்வியை எழுப்பி நெட்டிசன்கள் சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

லியோ படத்தில் கத்தி: என்னப்பா லோகேஷ் கனகராஜ், கார்த்தி மற்றும் கமலுக்கு பெரிய பெரிய துப்பாக்கிகளை கொடுத்துவிட்டு அண்ணன் விஜயின்னு வந்துட்டா மட்டும் வில்லு, கத்தின்னு அநியாயம் பண்றியேப்பா என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
லியோ படத்தின் கிளைமேக்ஸ் கூஸ்பம்ப்ஸாக இல்லாமல் மாஸ்டர் படம் போல மாறி விட்டால், பாக்ஸ் ஆபிஸில் பெரிய அடி விழுந்திருமே என்றும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஆனால், கண்டிப்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கத்தி சண்டைக்கு இணையாக பெரிய கன் ஃபைட்டையும் நடிகர் விஜய்க்கு வைத்திருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இந்த முறை என்ன பண்ணாலும் மிஸ்ஸே ஆகாது ஹேட்டர்களுக்கு ரெஸ்ட் இன் பீஸ் போட்டு வாலை சுருட்டி வைக்க சொல்லி விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











