மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கைதான் இட்லி கடை படக்கதையா? எல்லா ஃப்ரேமும் ஒத்துப் போகுதே பாஸ்!

சென்னை: நடிகர் தனுஷ் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் இட்லி கடை. இந்த படத்தை அவரது வொண்டர்பார் நிறுவனம் டான் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படி இருக்கையில் படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரத்தில் சிறப்பாக சென்னையில் நடைபெற்றது. அதேபோல் டிரைலர் வெளியீட்டு விழா கோவையில் படக்குழு நடத்தியது. இப்படி இருக்கையில் படத்தின் டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் டிரைலர் நன்றாக உள்ளது. செம செண்டிமெண்ட் ஸ்டோரியாக படம் இருக்கப் போகிறது என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் சிலர், படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தாலும் வழக்கம் போல் சிலர் டிரைலரை ட்ரோல் செய்துள்ளார்கள். அதுவும் கடந்த சில வாரங்களாக இணையத்தில் பரபரப்பான பேசு பொருளாக மாறியுள்ள நடிகரும் சமையற்கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கையின் கடந்த காலத்துடனும் சம காலத்தில் அவர் குறித்து விவாதிக்கப்படுகிற ஜாய் கிரிசல்டா திருமணம் வரையிலும் இணையவாசிகள் தொடர்புபடுத்தி பதிவிட்டு வருகிறார்கள்.

Netizens Trolls With Photos And Screenshots Dhanush Idli Kadai Story Is Madhampatty Rangaraj Life Story
Photo Credit:

மாதம்பட்டி ரங்கராஜ் நடிகர் என்றாலும் அவர் அடிப்படையில் நல்ல சமையல் கலைஞர். அவரது தந்தையும் சமையல் கலைஞர் தான். அவரது தந்தை அவரது ஊரில் சிறிய ஹோட்டல் ஒன்று நடத்தி வந்தார். இவருக்கும் ஹோட்டல் தொழில் மீது இருந்த ஆர்வம் அவரை சமையல் கலைஞராக மாற்றியுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் கலைஞராக உள்ளார்.

இட்லி கடை கதை: இப்படி இருக்கையில் இட்லி கடை டிரைலரில் தனுஷின் தந்தையாக வரும் ராஜ்கிரன் தனது ஊரில் சிறிய ஹோட்டல் ஒன்று நடத்தி வருகிறார். தனுஷ்க்கு சமையல் மீது இருந்த ஆர்வம் அவரை மிகப்பெரிய சமையல் கலைஞராக மாற்றிவிடுகிறது. பெரிய ஹோட்டலில் அவர் வேலைக்கு சேர்கிறார். அங்கு ஏற்படும் பிரச்னையால் மீண்டும் தனது சொந்த ஊருக்கே வந்து தனது தந்தையின் இட்லி கடையை நடத்துகிறார். இதனூடே நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை கதையாக எடுத்துள்ளார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் இல்லை.

Netizens Trolls With Photos And Screenshots Dhanush Idli Kadai Story Is Madhampatty Rangaraj Life Story
Photo Credit:

ஜாய் கிரிசல்டா விவகாரம்: இட்லி கடை டிரைலரை இணையத்தில் ட்ரோல் செய்யும் இணையவாசிகள் சில ஸ்கீரீன் ஷாட்களை இணையத்தில் பரப்பி வருகிறார்கள். அதைப் பார்க்கும்போது, என்னங்க அப்படியே ஒத்துப்போகுது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதாவது மாதம்பட்டி ரங்கராஜ் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம், அவரே நேரடியாக சமைக்கும் புகைப்படம், தோளில் துண்டை போட்டுக்கொண்டு இருக்கும் புகைப்படம் என எல்லா புகைப்படங்களுடன் இட்லி கடை படத்தின் டிரைலரில் இருக்கும் ஸ்கிரீன் ஷாட்கள் ஒத்துப் போகிறது. இதில் என்ன ஹைலைட் என்றால் மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்திற்கு ஒத்துப் போகும் காட்சியும் டிரைலரில் உள்ளாதால், அந்த புகைப்படத்தையும், டிரைலரில் உள்ள ஸ்கிரீன் ஷாட்டையும் சேர்த்து வைத்தும் பகிர்ந்து வருகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது சில ரசிகர்கள் மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கையைத்தான் தனுஷ் இட்லி கடை என்ற பெயரில் படமாக எடுத்துள்ளாரோ என்று விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X